உக்ரைனுக்கு கவச வாகனங்கள் மற்றும் ராக்கெட் லாஞ்சர்களை அனுப்பி வைக்கும் ஜெர்மனி !!

  • Tamil Defense
  • September 20, 2022
  • Comments Off on உக்ரைனுக்கு கவச வாகனங்கள் மற்றும் ராக்கெட் லாஞ்சர்களை அனுப்பி வைக்கும் ஜெர்மனி !!

ஜெர்மானிய பாதுகாப்பு அமைச்சர் கிறிஸ்டீன் லாம்பர்ட் உக்ரைனுக்கு ஜெர்மனி அளிக்கும் அடுத்தக்கட்ட ஆயுத உதவியில் கவச வாகனங்கள் மற்றும் ராக்கெட் லாஞ்சர்கள் இடம்பெறும் என தெரிவித்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை அன்று ஜெர்மானிய பாதுகாப்பு அமைச்சர் இதனை அறிவிக்கையில் 50 கவச வாகனங்களும், கூடவே 2 லாஞ்சர்கள், 200 ராக்கெட்டுகள் மற்றும் ராக்கெட்டுகளும் உக்ரைனுக்கான உதவியில் அடங்கும் என்றார்.

50 Dingo டிங்கோ கவச வாகனங்கள், இரண்டு MARS 2 பல குழல் லாஞ்சர்கள் மற்றும் அவற்றிற்கான 200 ராக்கெட்டுகளை உக்ரைன் அரசு ஜெர்மனி தங்களுக்கான ஆயுத உதவிகளை அதிகப்படுத்த வேண்டும் என கேட்டு கொண்டதன் அடிப்படையில் அனுப்பி வைப்பதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜெர்மானிய பாதுகாப்பு அமைச்சர் கிறிஸ்டீன் லாம்பர்ட் உக்ரைனிய வீரர்களுக்கு MARS 2 பல குழல் ராக்கெட் லாஞ்சர்களை இயக்குவதற்கான பயிற்சி செப்டம்பர் மாதம் துவங்கும் எனவும் அறிவித்துள்ளார்.

அதே போல் க்ரீஸ் ஜெர்மனி நாற்பது MARDER கவச வாகனங்களை தருவதாக வாக்குறுதி அளித்ததையடுத்து தன்னிடம் உள்ள நாற்பது சோவியத் காலகட்ட BMP-1 கவச வாகனங்களை உக்ரைனுக்கு அனுப்பி வைக்க உள்ளது.

இதற்கிடையே உக்ரைன் அரசு ஜெர்மனி தாங்கள் கேட்கும் ஆயுதங்களை தராமல் இழுத்தடிப்பதாகவும், Leopard டாங்கிகள் , MARDER கவச வாகனங்களை தராமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் குற்றம்சாட்டி வருகிறது.

அந்த நிலையில் தான் ஜெர்மனி அரசு உக்ரைனுக்கான இந்த ஆயுத உதவிகள் மற்றும் அடுத்த ஆண்டிற்கு சுமார் 500 மில்லியன் யூரோக்கள் மதிப்பிலான ஆயுத உதவிகளை அறிவித்துள்ளது கூடுதல் தகவல் ஆகும்.