முக்கிய தகவல்களை வெளியிட்ட ஜெர்மானிய உளவுத்துறை !!

  • Tamil Defense
  • September 22, 2022
  • Comments Off on முக்கிய தகவல்களை வெளியிட்ட ஜெர்மானிய உளவுத்துறை !!

ரஷ்யா எல்லையோர கிராமங்களில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம் செய்து வருவதாகவும், சீன மற்றும் ரஷ்ய ராணுவ அதிகாரிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே போல ஏற்கனவே ஈரான் அர்மீனியா உடனான எல்லையோரம் 50,000 வீரர்களை குவித்த நிலையில் துருக்கியும் தற்போது அர்மீனியா உடனான தனது எல்லையோரம் சுமார் 50,000 வீரர்களை குவித்துள்ளதாகவும்

அஸர்பெய்ஜான் உடைய கூட்டாளியான துருக்கியின் இந்த படை குவிப்பு நடவடிக்கை அர்மீனியாவின் தெற்கு பகுதியான நக்சிவான் முதல் ஸ்யூனிக் மாகாணங்கள் வரையிலான பகுதிகளை தாக்கி கைப்பற்றுதற்காக இருக்கலாம் எது எப்படியோ முழு அளவிலான போருக்கு அதிக சாத்தியக்கூறுகள் இருப்பதாக ஜெர்மன் அதிகாரிகள் கூறுகின்றனர்.