மீண்டும் இந்தியாவுக்கு ரஃபேல் போர் விமானங்களை விற்க கடும் முயற்சி செய்யும் ஃபிரான்ஸ் !!
1 min read

மீண்டும் இந்தியாவுக்கு ரஃபேல் போர் விமானங்களை விற்க கடும் முயற்சி செய்யும் ஃபிரான்ஸ் !!

ஃபிரான்ஸ் ஏற்கனவே இந்திய விமானப்படைக்கான 36 ரஃபேல் போர் விமானங்களையும் டெலிவரி செய்துவிட்ட நிலையில் தற்போது மீண்டும் ரஃபேல் விமானங்களை விற்க ஃபிரான்ஸ் மிகவும் தீவிரமாக முயன்று வருகிறது.

முதலாவது ஒப்பந்தம் இறுதிகட்டத்தை நெருங்கிய போது இந்திய விமானப்படை மீண்டும் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க ஆர்வம் காட்டியது ஆனால் தற்போது விமானப்படை 114 MRFA Multi Role Fighter Aircraft வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகிறது.

மேற்குறிப்பிட்ட MRFA பல திறன் போர் விமானங்கள் டென்டரில் தொழில்நுட்ப பரிமாற்றம் சார்ந்த சில கடுமையான விதிமுறைகள் மற்றும் சில நிபந்தனைகளை வகுப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கலால் இந்த திட்டம் முன்னேற்றம் அடையாமல் உள்ளது.

MRFA டென்டரிலும் ரஃபேல் போர் விமானம் தான் முன்னனி வகிக்கும் என கூறப்படும் நிலையில் அதில் முன்னேற்றம் இல்லாத காரணத்தால் ஃபிரான்ஸ் அரசு மற்றும் Dassault Aviation நிறுவனம் ஆகியவை கூட்டாக மீண்டும் 36 ரஃபேல் போர் விமானங்களுக்கான ஆர்டரை பெறுவதில் மும்முரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

தற்போது நாக்பூரில் உள்ள DRAL Dassault Reliance Aerospace Limited தொழிற்சாலையானது ரஃபேல் போர் விமானங்களுக்கான உதிரி பாகங்கள் மற்றும் இதர முக்கிய அமைப்புகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

ஆனால் இந்தியா இந்த தொழிற்சாலையில் அதிக பங்குகளை வாங்காத வரையிலும், மேலதிக ஆர்டர்களை கொடுக்காத வரையிலும் இங்கு ரஃபேல் விமானங்களை தயாரிக்க ஃபிரான்ஸ் முன்வராது என்பதும்

அதே நேரத்தில் தற்போது ரஃபேல் போர் விமானங்களுக்கு கிடைத்துள்ள உலகளாவிய ஆர்டர்களை நிறைவேற்றும் பொருட்டு ஃபிரான்ஸில் உள்ள தயாரிப்பு தொழிற்சாலையின் திறனை அதிகப்படுத்த Dassault Aviation நிறுவனம் முடிவு செய்துள்ளது கூடுதல் தகவல் ஆகும்.