இந்தியாவுடன் லிமிட் இல்லாத ஒத்துழைப்பு அணுசக்தி தாக்குதல் நீர்மூழ்கி கப்பல் தொழில்நுடபத்தை தர முன்வந்த ஃபிரான்ஸ் !!

  • Tamil Defense
  • September 18, 2022
  • Comments Off on இந்தியாவுடன் லிமிட் இல்லாத ஒத்துழைப்பு அணுசக்தி தாக்குதல் நீர்மூழ்கி கப்பல் தொழில்நுடபத்தை தர முன்வந்த ஃபிரான்ஸ் !!

சமீபத்தில் ஃபிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் கேதரின் கலோன்னா இந்தியாவுக்கு சுற்றுபயணமாக வந்தார் பின்னர் தலைநகர் தில்லியில் பிரதமர் மோடி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர் ஆகியோரை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் ஃபிரான்ஸ் இந்தியாவுக்கு லிமிட்டே இல்லாத அதாவது கட்டுபாடுகள் இல்லாத ஒத்துழைப்பை இருதரப்பு உறவுகளில் தர விரும்புவதாக தெரிவித்து ஒரு பம்பர் ஆஃபரை அறிவித்துள்ளார்.

அதன்படி இதுவரை ரஷ்யா அமெரிக்கா உட்பட எந்த நாடுகளும் நெருங்கிய நட்பு நாடுகள் என கூறி கொண்டாலும் இதுவரை இந்தியாவுக்கு வழங்க மறுத்த அணுசக்தியால் இயங்கும் தாக்குதல் நீர்மூழ்கி கப்பல் தொழில்நுட்பத்தை தர தற்போது ஃபிரான்ஸ் முன்வந்துள்ளது.

அதன்படி Project 75 Alpha (P-75A) திட்டத்தின் கீழ் 6 அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கி கப்பல்களை கட்ட இந்தியாவுக்கு ஃபிரான்ஸ் தனது Barracuda or Suffren ரக நீர்மூழ்கி கப்பல்களின் தொழில்நுட்பத்தை தந்து வடிவமைக்கவும் உதவும்.

இன்றைக்கு உலகில் உள்ள மிகவும் அதிநவீனமான அணுசக்தி தாக்குதல் நீர்மூழ்கி கப்பல்களில் Suffren ஒன்றாகும், மேலும் சில வருடங்கள் முன்னர் தான் முதலாவது Barracuda ரக நீர்மூழ்கி கப்பலை ஃபிரான்ஸ் படையில் இணைத்தது, சத்தமில்லா Pumpjet Propulsion உள்ளிட்ட பல அதிநவீன தொழில்நுட்பங்கள் இதில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஃபிரான்ஸ் Project 75 India (P – 75 I) திட்டத்தின் கீழ் இந்தியா கட்ட விரும்பும் 6 அதிநவீன டீசல் எலெக்ட்ரிக் தாக்குதல் நீர்மூழ்கி கப்பல்கள் திட்டத்திற்கு தனது Shortfin Barracuda நீர்மூழ்கி கப்பல் தெழில்நுட்பத்தை தர முன்வந்துள்ளது.

இவற்றை G2G Government to Government deal அதாவது இருநாட்டு அரசுகளும் நேரடியாக செய்து கொள்ளும் ஒப்பந்த முறை மூலமாக நிறைவேற்றி கொள்ள தயார் எனும் ஃபிரான்ஸ் அரசின் நிலைபாட்டை கேதரின் கலோன்னா தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இங்கிலாந்து அமெரிக்கா ஆஸ்திரேலியா இடையேயான AUKUS ஒப்பந்தம் காரணமாக வெதும்பி கொண்டிருந்த ஃபிரான்ஸ் தற்போது இந்தோ பசிஃபிக் பிராந்தியத்தில் தனது இருப்பை பலப்படுத்தி கொள்ளவும் தவிர்க்க முடியாத சக்தியான இந்தியாவுடன் நெருக்கத்தை அதிகபடுத்தி கொள்ளவும் காய் நகர்த்தி உள்ளது என்றால் மிகையாகாது.