கிர்கிஸ்தான் தஜிகிஸ்தான் இடையே சண்டை 60 பேர் மரணம் !!

கிர்கிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் இடையே கடந்த 2021ஆம் ஆண்டு நீர் பங்கீடு தொடர்பான பிரச்சினை காரணமாக மோதல் ஏற்பட்டது, இதில் 55 பேர் மரணத்தை தழுவினர் மேலும் 44000 பேர் இடம் மாற்றப்பட்டனர்.

இந்த பிரச்சினை முடிவுக்கு வந்த நிலை தற்போது மீண்டும் இரு நாடுகள் இடையே எல்லையோரம் பதட்டம் அதிகமானது தொடர்ந்து அது இரு தரப்பு இடையேயான சண்டையில் போய் நின்றது.

கடந்த வாரம் ஆரம்பத்தில் துவங்கிய இந்த சண்டையில் இருதரப்பும் டாங்கிகள், பிரங்கிகள், ராக்கெட்டுகளை பயன்படுத்தி கடுமையாற தாக்குதலை ஒருவர் மீது ஒருவர் நடத்தி வருகின்றனர், இதில் கிர்கிஸ்தான் பக்கம் இழப்பு அதிகமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுமார் 1,36,000 பேரை கிர்கிஸ்தான் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றியுள்ளதாகவும் இதுவரை 60க்கும் அதிகமானோர் தஜிகிஸ்தான் படைகளின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.

தற்போது இந்த சண்டைக்கு சரியான காரணம் என்ன என்பது பற்றிய தகவல்கள் தெரியவில்லை இடையில் வெள்ளிக்கிழமை இருதரப்பும் போர் நிறுத்தம் அறிவிக்க முயற்சி செய்தும் சற்று நேரத்திலேயே அது பலனளிக்காமல் போனது.

தஜிகிஸ்தான் அரசு இந்த போர் பற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில் கிர்கிஸ்தான் படைகள் எல்லையோரம் உள்ள தங்கள் நாட்டு கிராமங்களை கடுமையாக தாக்கி வருவதாக குற்றம்சாட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.