யாரை ஏமாற்ற பார்க்கிறீர்கள் அமெரிக்காவை நோக்கி காட்டமான கேள்வி முன்வைத்த இந்திய வெளியுறவு அமைச்சர் !!

  • Tamil Defense
  • September 28, 2022
  • Comments Off on யாரை ஏமாற்ற பார்க்கிறீர்கள் அமெரிக்காவை நோக்கி காட்டமான கேள்வி முன்வைத்த இந்திய வெளியுறவு அமைச்சர் !!

அலுவல் ரீதியிலான சுற்று பயணமாக அமெரிக்கா சென்றுள்ள இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் அங்கு இந்திய வம்சாவளி மக்களிடையே உரையாற்றினார் அப்போது அமெரிக்க அரசின் சமீபத்திய சில செயல்பாடுகளை சுட்டி காட்டி கடும் விமர்சனத்தை முன்வைத்தார்.

அதாவது சமீபத்தில் அமெரிக்க அரசானது பாகிஸ்தான் விமானப்படையின் F-16 ரக போர் விமானங்களுக்கான 450 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான உதவி திட்டத்திற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது, முன்னாள் அதிபர் ட்ரம்ப் தனது ஆட்சி காலத்தின் போது இது உட்பட பாகிஸ்தானுக்கான அனைத்து உதவிகளையும் நிறுத்தி வைத்திருந்தார்.

இந்த நிலையில் அதிபராக பைடன் பொறுப்பேற்ற காலம் தொட்டு பாகிஸ்தான் உடனான அமெரிக்க உறவுகள் சற்றே நெருக்கமடைந்தன, ஒரு பக்கம் தவிர்க்க முடியாத கூட்டாளி என கூறிக்கொண்டு பாகிஸ்தானுக்கு உதவுவது இந்தியாவை சற்றே கடுப்பேற்றி உள்ளது.

அமைச்சர் ஜெய்ஷங்கர் பாகிஸ்தான் இந்த விமானங்களை பயங்கரவாத எதிர்ப்புக்கு பயன்படுத்தும் என கூறுகிறீர்கள் ஆனால் அவற்றை பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தும் என்பதும் பயன்படுத்தி உள்ளது என்பதும் உங்களுக்கு தெரியும் ஆகவே யாரை இப்படி சொல்லி ஏமாற்ற பார்க்கிறீர்கள் என காட்டமான கேள்வியை முன்வைத்துள்ளார்.

அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் உடனான உறவில் ஒரு நன்மையும் இல்லையும் ஆகவே இதனால் உங்களுக்கு கிடைப்பது என்ன என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும் மேலும் ஒரு நான் ஒரு அமெரிக்க கொள்கை வகுப்பாளரை சந்தித்தால்,

கடந்த காலங்களில் பாகிஸ்தான் உடனான உறவால் உங்களுக்கு கிடைத்த லாபம் என்ன எனவும், எங்களை அதாவது இந்தியாவை விட்டு விடுங்கள் அமெரிக்காவுக்கு இது ஏன் நல்லது இல்லை என்பதையும் நினைவுபடுத்துவேன் என கூறியுள்ளார்.