இந்திய அமெரிக்க உறவுகள் இருதரப்பு நலன்களை மட்டுமே சார்ந்தது அல்ல வெளியுறவு துறை அமைச்சர் !!

உலகின் இரண்டு மிகப்பெரிய ஜனநாயக நாடுகளான இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான உறவானது இருதரப்பு நலன்களை மட்டுமே சார்ந்தது அல்ல என இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்ஷங்கர் கூறியுள்ளார்.

மேலும் அவர் பேசுகையில் இரண்டு நாடுகளும் தங்களுக்கு இடையிலான உறவின் முக்கியத்துவம், அதன் நன்மைகள், திறன்களை பற்றி நன்கு உணர்ந்துள்ளதாகவும் இருதரப்பு உறவுகள் வளர்ச்சி அடைவதற்கு இனியும் பிரகாசமான வாய்ப்புகள் உள்ளதாகவும்

இந்திய அமெரிக்க உறவை எடுத்துக்கொண்டு நன்கு கவனித்தால் அதன் முக்கியத்துவம் புரியும் இன்று இந்திய அமெரிக்க உறவுகள் ஒட்டுமொத்த உலகம் குறிப்பாக இந்தோ பசிஃபிக் பிராந்தியத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்ஷங்கர் அரசாங்க சுற்றுபயணமாக நான்கு நாட்கள் அமெரிக்கா சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.