மஹாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பை நகரை தளமாக கொண்டு இயங்கும் Jatayu Unmanned Systems எனும் நிறுவனம் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே வடிவமைத்து தயாரிக்கப்பட்ட ஒரு சண்டை ட்ரோனை தயாரித்துள்ளது.
Jatayu Aim – X எனப்படும் இந்த ஆளில்லா விமானத்தில் ராணுவ வீரர்கள் பயன்படுத்தும் ஒரு சண்டை துப்பாக்கி Assault Rifle பொருத்தப்பட்டு இருக்கும், இத்தகைய ஆயுதம் பொருத்தப்பட்ட முதல் இந்திய ஆளில்லா விமானம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆளில்லா விமானத்தை தரையிலிருந்தும் அல்லது செயற்கைகோள் மூலமாகவும் கட்டுபடுத்தி இயக்க முடியும், பல வகையான நிலபரப்பிலும் இந்த வகை ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி கொள்ள முடியும் என கூறப்படுகிறது.
இந்திய தரைப்படை, துணை ராணுவப்படை மற்றும் காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற சோதனைகளில் இந்த ஆளில்லா விமானம் சுமார் 93 சதவிகித துல்லியத்துடன் இலக்குகளை வெற்றிகரமாக தாக்கியது, வேண்டும் விரைவில் இந்திய விமானப்படை மற்றும் கடற்படை அதிகாரிகள் முன்னரும் சோதனை நடத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.