உத்தம் FCR தாக்குதல் கட்டுபாட்டு ரேடார் உருவாக்க அனுமதி !!

நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (DRDO) ஒரு பிரிவு தான் LRDE Electronics and Radar Development Eastablisment மின்னனுவியல் மற்றும் ரேடார் மேம்பாட்டு அமைப்பு.

தேஜாஸ் விமானத்தில் உள்ள உத்தம் தாக்குதல் கட்டுபாட்டு ரேடாரின் Uttam FCR செயல்பாட்டை கண்டு திருப்தியடைந்த இந்திய விமானப்படை LRDE அமைப்பிற்கு மேற்குறிப்பிட்ட ரேடாரின் மேம்படுத்தப்பட்ட வடிவத்தை உருவாக்க தனது ஒப்புதலை அளித்துள்ளது.

இந்த புதிய ரேடாரை சுகோய்-30 போர் விமானத்தில் இணைத்து பயன்படுத்த விமானப்படை விரும்புகிறது, ஆகவே தேஜாஸை விட பல மடங்கு பெரிதான சுகோயில் உள்ள இடவசிதயை பயன்படுத்தி மிகவும் சக்திவாய்ந்த ஒரு TR – Transmit and Recieve அமைப்பை ரேடாருடன் இணைக்க திட்டமிடப்பட்டு உள்ளது, இதன் மூலம் மிகப்பெரிய தேடல் மற்றும் கண்டுபிடித்தல் திறனை சுகோய் விமானங்கள் பெறும்.

சூப்பர் சுகோய் மேம்படுத்தல் திட்டத்தின் ஒரு பகுதியான இந்த ரேடாரின் சோதனைகள் 2024ஆம் ஆண்டு துவங்கும் அப்போது இரண்டு சுகோய்-30 போர் விமானங்களை சோதனைக்கு அனுப்பி வைக்கவும் இந்திய விமானப்படை தனது சம்மதத்தை தெரிவித்துள்ளது.

மேலும் சுகோய்-30 விமானங்களுக்கான ஒரு புதிய சக்திவாய்ந்த அதிநவீன DFCC Digital Flight Controller Computer டிஜிட்டல் விமான கட்டுபாட்டு கணிணி அமைப்பும் தயாரிக்கப்பட்டு வருகிறது, இவையனைத்தும் மேற்கத்திய சுதேசி ஆயுதங்களை குறிப்பாக ஹைப்பர்சானிக் மற்றும் தரை தாக்குதல் ஆயுதங்களை சுகோய் விமானங்களில் வெற்றிகரமாக இணைக்க உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.