இந்திய தனியார் நிறுவனத்தின் ட்ரோன்களை வீழ்த்தும் ட்ரோன் !!

  • Tamil Defense
  • September 15, 2022
  • Comments Off on இந்திய தனியார் நிறுவனத்தின் ட்ரோன்களை வீழ்த்தும் ட்ரோன் !!

ரத்தன்இந்தியா RattanIndia எனும் இந்திய தனியார் குழுமத்தின் ஒரு பிரிவான NeoSky India Ltd எனும் நிறுவனம் இந்த ஆண்டு ஆரம்பத்தில் Throttle Aerospace Systems எனும் நிறுவனத்தின் 60% பங்குகளை வாங்கியது.

அந்த வகையில் Throttle Aerospace நிறுவனத்தின் முதன்மை உரிமையாளராக RattanIndia நிறுவனம் உள்ளது, புதன்கிழமை அன்று Defender என பெயரிடப்பட்டுள்ள ஆளில்லா விமானங்களை வீழ்த்தும் ஆளில்லா விமானத்தை இந்த நிறுவனம் வெளி உலகிற்கு அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த Defender ஆளில்லா விமானத்தில் 70 சதவிகித பாகங்கள் இந்திய தயாரிப்பாகும் மீதமுள்ள 30 சதவிகித பாகங்கள் வெளிநாட்டு தயாரிப்பாகும் அதில் BLDC Motor மற்றும் பேட்டரிகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த Defender ஆளில்லா விமானமானது சுமார் 30 மீட்டர் தொலைவில் உள்ள எதிரி ஆளில்லா விமானத்தை ஒரு வலையை வீசி பிடிக்கும், ஆயுதம் தாங்கிய ஆளில்லா விமானங்களை விடவும் இவை மலிவானவை என்பது இவற்றின் சிறப்பம்சம் ஆகும்.

மேலும் இந்த Defender ரக ஆளில்லா விமானங்கள் அதிகபட்சமாக சுமார் 20 கிலோமீட்டர் தொலைவு வரை பயணிக்க கூடியவை என்பதும் ஒரு நொடியில் சுமார் 26 மீட்டர் தொலைவை கடக்கும் ஆற்றல் கொண்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது.