
இந்தியாவை தளமாக கொண்டு இயங்கும் ஹேக்கர் குழுவான IndiShell நேற்று பாகிஸ்தான் பிரதமர் அலுவலகத்தின் கணிணி அமைப்புகள் மீது பயங்கர சைபர் தாக்குதலை நிகழ்த்தியுள்ளது.
இந்த சைபர் தாக்குதல்களை நிகழ்த்திய கையோடு பாகிஸ்தான் பிரதமர் ராணுவ தளபதி, உளவுத்துறை அதிகாரிகள், அமைச்சர்களுடன் போனில் பேசிய முக்கிய உரையாடல்களை ஹேக் செய்து கைப்பற்றி உள்ளனர்.
சுமார் 100 மணி நேரம் அளவிலான இந்த உரையாடல்களை தற்போது DarkWeb இல் சுமார் 3000 டாலர்களுக்கு விற்பனைக்கு இட்டுள்ளனர், ஒரு பக்கம் இந்த தாக்குதல் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்
பாகிஸ்தான் உளவு அமைப்பான ISI பாகிஸ்தான் பிரதமர் அலுவலக கணிணி அமைப்புகளில் பாதுகாப்புக்கு பொருத்தி வைத்திருந்த அமைப்புகளை கொண்டே இந்த தாக்குதலை நடத்தியுள்ளது ஒட்டுமொத்த பாகிஸ்தானையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.