CSL Cochin Shipyard Limited எனப்படும் கொச்சி கப்பல் கட்டுமான தளத்தின் மேலாண்மை இயக்குனர் மது நாயர் சமீபத்தில் சுமார் 65000 டன்கள் எடை கொண்ட விமானந்தாங்கி கப்பலை 8 ஆண்டுகளில் கட்ட முடியும் என தெரிவித்துள்ளார்.
தற்போது 500 நிறுவனங்களின் தேர்ச்சி பெற்ற ஊழியர்களை கொண்டு 65000 டன் எடை கொண்ட விமானந்தாங்கி கப்பலை 8-9 ஆண்டுகளில் கட்டி வழங்க முடியும் என்றார், 40,000 டன் விக்ராந்தை கட்ட 13 வருடங்கள் ஆனது குறிப்பிடத்தக்கது.
மேலும் மது நாயர் அவர்கள் பேசும்போது விக்ராந்த கட்ட 13 ஆண்டுகள் ஆனதற்கு ரஷ்யாவின் காலதாமதமே காரணம் என்றார் அதாவது ரஷ்யா தேவையான பிரத்தியேக உலோகத்தை சப்ளை செய்யவும், ஒடுதளத்திற்கு தேவையான மின்விளக்கு அமைப்புகளை தருவதிலும் காலதாமதம் செய்தது.
இதன் காரணமாக 2+1 என மூன்று வருடமும், கொரோனா பெருந்தொற்று காரணமாகவும் இத்தகைய நீண்ட காலதாமதம் ஏற்பட்டதாகவும் கூறினார், தொடர்ந்து கப்பல் கட்ட தேவையான 249 A, 249 B ரக உலோகங்களை இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான SAIL தயாரித்து வழங்கியது கூடுதல் தகவல் ஆகும்.