1 min read
F-35 ஸ்டெல்த் போர் விமானத்தில் சீன தயாரிப்பு பாகங்கள் தயாரிப்பை நிறுத்திய அமெரிக்கா !!
அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகன் லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் தயாரிக்கும் அதிநவீன ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானமான F-35ன் தயாரிப்பு மற்றும் டெலிவரிகளை நிறுத்தியுள்ளது.
இதற்கு காரணம் F-35 போர் விமானத்தின் பம்புகளில் (Pump) பயன்படுத்தப்படும் காந்தம் (Magnet) ஒன்றில் பயன்படுத்தப்பட்டுள்ள உலோகமானது சீனாவில் தயாரிக்கப்பட்ட என்பதை அமெரிக்க ராணுவம் கண்டறிந்துள்ளதே ஆகும்.
இது மிகப்பெரிய பிரச்சினை அல்ல எனவும் இதன் மூலம் சீனா தகவல்களை பெற முடியாது மேலும் விமானம் இயங்குவதிலோ அல்லது வேறு எவ்விதமான தொழில்நுட்ப பிரச்சினைகளோ இல்லை எனவும்
தற்போது இதற்கு தேவையான மாற்று உலோகம் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் எதிர்காலத்தில் அனைத்து F-35 விமானங்களிலும் இது பொருத்தப்படும் என அமெரிக்க ராணுவ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.