தைவானுக்கு உதவும் எந்த செயல்பாட்டையும் சீனா வலுவான நடவடிக்கை எடுக்கும் ஐக்கிய நாடுகள் சபையில் அறிவிப்பு !!

  • Tamil Defense
  • September 26, 2022
  • Comments Off on தைவானுக்கு உதவும் எந்த செயல்பாட்டையும் சீனா வலுவான நடவடிக்கை எடுக்கும் ஐக்கிய நாடுகள் சபையில் அறிவிப்பு !!

சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யீ அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் பொது சபை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார் அப்போது தைவான் விவகாரம் தொடர்பான காட்டமான கருத்துக்களை முன்வைத்தார்.

அதாவது தைவானுக்கு உதவும் எந்தவொரு முயற்சியையும் சீனா பலப்பிரயோகம் செய்தாவது தடுக்கும் ஆகவே தைவானுக்கு உதவுவதை நிறுத்தி கொள்ள வேண்டுமென சீன வெளியுறவு துறை அமைச்சர் பேசியுள்ளார்.

மேலும் அவர் அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஆந்தனி ப்ளிங்கெனை சந்தித்து பேசினார் அப்போது ப்ளிங்கென் தைவானுடைய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை பாதுகாப்பது எவ்வளவு முக்கியம் என விளக்கியதாகவும் தொடர்ந்து சீனா வெளியுறவு அமைச்சர் அமெரிக்கா ஆபத்தான செயல்களில் ஈடுபட்டுள்ளதாக விமர்சித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.