நீருக்கடியில் செல்லும் ஹைப்பர்சானிக் ஏவுகணையை உலக வரலாற்றில் முதல்முறையாக உருவாக்கும் சீனா !!
சீன பொறியாளர்கள் குழு ஒன்று உலக வரலாற்றிலேயே முற்றிலும் புதிய ஒர் திறனை கொண்ட ஹைப்பர்சானிக் ஏவுகணை ஒன்றை வடிவமைத்து தயாரித்து வருகின்றனர்.
இந்த ஹைப்பர்சானிக் ஏவுகணையின் சிறப்பம்சம் என்னவெனில் இதனால் நீருக்கு அடியிலும் பயணிக்க முடியும் ஆனால் வேகம் கணிசமாக குறையும் அதாவது மணிக்கு 360 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ராக்கெட் 5 மீட்டர் நீளம் கொண்டதாகும், 10 கிலோமீட்டர் உயரம் செல்லும், வானில் அதிகபட்சமாக மணிக்கு 2450 கிலோமீட்டர் (2.5 மாக்) வேகமும், நீருக்கு அடியே 100 மீட்டர் ஆழம் வரையும் நொடிக்கு 100 மீட்டர் வேகத்திலும் பயணிக்கும் ஆற்றல் கொண்டதாகும்.
மேலும் வானில் சுமார் 200 கிலோமீட்டர் தொலைவு பயணித்த நீருக்குள் பாயும் பின்னர் நீருக்கு அடியில் 20 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்கும் அதே போல் இலக்கில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் வைத்து நீருக்குள் பாய்ந்து இலக்கை நோக்கி பயணிக்கும் எனவும் கூறப்படுகிறது.
இப்படி நீருக்குள் பயணிப்பதால் எதிரி நாட்டின் வான் பாதுகாப்பு அமைப்புகளின் பார்வையில் சிக்காமல் தப்பிக்க முடியும் ஆனால் இந்த திட்டத்தின் உச்சகட்ட சிக்கல் என்பது நீரிலும் வானிலும் பயணிக்கும் சக்தியை அளிக்கும் திறன் கொண்ட என்ஜினை உருவாக்குவதாகும்.