போலி போர் விமானங்களை நிறுத்திய சீனா காரணம் என்ன ??
சீனா சமீபத்தில் தனது லின்டாவோ விமானப்படை தளத்தில் தனது ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானமான J-20 ஐ போல பல போலி விமானங்களை நிறுத்திய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அதாவது கடந்த ஜூலை 19ஆம் தேதி முதல் செப்டம்பர் 9ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் எட்டு போலி J – 20 போலி ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை நிறுத்தியது செயற்கைகோள் புகைப்படங்கள் வாயிலாக தெரிய வந்துள்ளது.
பொதுவாக இப்படி போலி போர் விமானங்களை போர் நடக்கும் போது எதிரிகளை ஏமாற்றவும் அவர்களின் குண்டுகளை வீணடிக்கவும் பயன்படுத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது கூட உக்ரைன் போரில் ரஷ்யா மற்றும் உக்ரைன் படைகள் ஒருவரை ஒருவர் ஏமாற்றி கொள்ள இத்தகைய வழிமுறையை கையாண்டு வருகின்றனர்.
ஆனால் சீனா தற்போது இவற்றை பயன்படுத்த காரணம் என்ன என்பது தெரியவில்லை அதிக ஐந்தாம் தலைமுறை விமானங்கள் இருப்பதாக உலக நாடுகளை நம்ப வைப்பதற்காக கூட இருக்கலாம் எனவும் ஒரு சாரார் கருத்து தெரிவித்துள்ளனர்.