லடாக் பாங்காங் ஸோ ஏரி பகுதியில் கண்காணிப்பு ரேடார் அமைக்கும் சீனா !!

  • Tamil Defense
  • September 5, 2022
  • Comments Off on லடாக் பாங்காங் ஸோ ஏரி பகுதியில் கண்காணிப்பு ரேடார் அமைக்கும் சீனா !!

லடாக்கில் பாங்காங் ஸோ ஏரியை ஒட்டிய பகுதியில் தாழ்வாக பறக்கும் செயற்கைகோள்கள் மூலமாக எடுக்கப்பட்ட புகைப்படத்தில் சீனா பிரச்சினைக்குரிய Finger 4 Finger 8 ஆகிய பகுதிகளில் கண்காணிப்பு ரேடார் அமைத்து வருவது தெரிய வந்துள்ளது.

செயற்கைகோள் புகைப்பட நிபுணர் டேமியன் சைமன் இந்த புகைப்படங்களை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார், மேலும் சோலார் பேனல்கள், ரேடார் சிக்னல்களை வெளியிடும் ஒரு ரேடோம் ஆகியவை காணப்படுகின்றன.

இத்தகைய ரேடார்கள் அதிக திறன் வாய்ந்தவை இல்லை எனினும் இவை அனைத்தும் நிரந்தர கட்டுமானங்கள் ஆகும் இவற்றை கட்டமைப்பதன் மூலமாக சீனா இந்தியாவுக்கு ஒரு செய்தியை மறைமுகமாக தெரிவிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இங்கு பயன்படுத்தப்படும் ரேடோம் அமைப்புகள் மின்காந்த சமிக்ஞைகள் எந்தவித சிக்கலும் இன்றி வெளிப்பட அனுமதிக்கும் ஆனால் அதே நேரத்தில் மோசமான காலநிலைகளில் இருந்து ரேடாரை பாதுகாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.