மிகப்பெரிய கடல்சார் படையெடுப்பு பயிற்சியை மேற்கொண்ட சீன ராணுவம் !!
1 min read

மிகப்பெரிய கடல்சார் படையெடுப்பு பயிற்சியை மேற்கொண்ட சீன ராணுவம் !!

சீன ராணுவம் சிவிலியன் பயன்பாட்டுக்கான வாகனங்களை சுமக்கும் கலன்களில் இருந்து தாக்குதல் நிலநீர் வாகனங்களை கடல்மார்க்கமாக அனுப்பி படையெடுக்கும் ஒரு பயிற்சியை மேற்கொண்டு உள்ளது.

தைவான் ஜலசந்தியில் உள்ள ஒரு சீனாவுக்கு சொந்தமான தீவிற்கு அருகே இந்த கடல்சார் படையெடுப்பு போர் பயிற்சி நடைபெற்றுள்ளது செயற்கைகோள் புகைப்படங்கள் மூலமாக தெரிய வந்துள்ளது.

இதற்காக தீவின் கரையில் இருந்து சற்று தொலைவில் சிவிலியன் வாகன போக்குவரத்து கலன்கள், ஒரு மிகப்பெரிய Ro-Ro வாகனங்களை சுமக்கும் கப்பல் மற்றும் போர் கப்பல்களை நிறுத்தி பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.

இவற்றில் இருந்து கடலில் இறக்கப்பட்ட நிலநீர் சண்டை வாகனங்கள் கடல்மார்க்கமாக பயணித்து தீவின் கடற்கரை பகுதிகளை அடைந்து படையெடுப்பது போன்று இயங்கி கடல்சார் படையெடுத்தல் போர் ஒத்திகையில் ஈடுபட்டன.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் சீனா பயன்படுத்திய மிகப்பெரிய RoRo ரக கப்பலாகும், சுமார் 15000 டன் எடை கொண்ட போ ஹாய் ஹெங் டாங் Bo Hai Heng Tong எனும் இந்த கப்பல் வழக்கமாக வாகன ஏற்றுமதிக்கு பயன்படுத்தப்படுவது ஆகும்.

இது அமெரிக்க கடற்படையின் San Antonio ரக நிலநீர் போர்முறை கப்பல்களை விடவும் சுமார் மூன்று மடங்கு அதிகமான கொள்ளளவை கொண்டதாகும் ஆகவே அதிக வாகனங்களை இதனால் சுமக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.