விரைவில் ஆம்கா AMCA போர் விமான திட்டத்திற்கு கேபினட் கவுன்சில் அனுமதி ??

சமீபத்தில் தேஜாஸ் மார்க்-2 Tejas Mk-2 போர் விமான திட்டத்திற்கு பிரதமர் தலைமையிலான பாதுகாப்புக்கான கேபினட் கவுன்சில் தனது ஒப்புதலையும் வழங்கி சுமார் 6500 கோடி ரூபாயை இந்த திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்தது அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் இந்தியாவின் கனவு திட்டங்களில் ஒன்றான ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானமான ஆம்கா AMCA திட்டத்திற்கு அடுத்த சில மாதங்களில் பாதுகாப்புக்கான கேபினட் கவுன்சில் தனது ஒப்புதலை வழங்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

சுமார் 15000 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஆம்கா திட்டம் சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் குறிப்பாக விஞ்ஞான வளர்ச்சியில் மிகப்பெரிய மைல் கல்லாக அமையும் என்பதில் எவ்வித மாற்று கருத்தும் இல்லை இந்த திட்டத்தின் மூலம் இந்திய விமானப்படை உலகளாவிய ரீதியில் பெரும் சக்தியாக மாறுவதோடு மட்டுமின்றி சீனா பாகிஸ்தானுக்கு எதிராக பெரும் சக்தியாக உருவெடுக்கும் என்றால் மிகையல்ல.

இந்த 25 டன்கள் எடையிலான ஆம்கா AMCA போர் விமானத்தில் சூப்பர் க்ரூஸ் போன்ற திறன்கள் இருக்கும், இந்த விமானத்தில் பயன்படுத்தி கொள்ள சுமார் 110 கிலோ நியூட்டன் ஆற்றலை வெளிபடுத்தக்கூடிய ஒர் அதிநவீன என்ஜினை ஃபிரான்ஸ் நாட்டின் SAFRAN குழுமத்துடன் இணைந்து தயாரிக்க இந்தியா விரும்புகிறது.

இது தவிர AESA Active Electronically Scanned Array Radar, Data Fusion தகவல் தரவு ஒருங்கிணைப்பு, Multi Sensor Integration சென்சார் ஒருங்கிணைப்பு, Serpentine Air intake போன்ற அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் இதர அமைப்புகளும் AMCA வில் காணப்படும், 2035ஆம் ஆண்டு வாக்கில் தயாரிப்பு பணிகள் துவங்கும் என கூறப்படும் நிலையில் இந்திய விமானப்படை 5-7 படையணிகள் வரையிலான அதாவது 90-126 விமானங்கள் வரை படையில் இணைக்க விரும்புவது கூடுதல் தகவல் ஆகும்.