தைவான் மீது படையெடுத்தால் அமெரிக்க படைகள் நேரடியாக களம் கானும் அமெரிக்க அதிபர் !!

  • Tamil Defense
  • September 22, 2022
  • Comments Off on தைவான் மீது படையெடுத்தால் அமெரிக்க படைகள் நேரடியாக களம் கானும் அமெரிக்க அதிபர் !!

சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அமெரிக்காவை சேர்ந்த மிகவும் பிரபல தொலைக்காட்சி மற்றும் இணையதள ஊடகமான CBS News உடைய 60 minutes நிகழ்ச்சியில் தொலைபேசி மூலமாக பேட்டியளித்தார்.

அப்போது செய்தியாளர் அதிபர் ஜோ பைடனிடம் தைவான் மீது சீனா படையெடுத்தால் தைவானுக்கு அமெரிக்கா உதவுமா என்று கேட்க அதற்கு அவர் தைவானுக்கு எதிராக தாக்குதல் நடைபெற்றால் அமெரிக்கா உதவும் என்றார்.

அப்போது செய்தியாளர் உக்ரைனை போலின்றி அமெரிக்கா நேரடியாகவே சீனாவை எதிர்த்து தைவானுக்கு ஆதரவாக இருக்குமா என கேட்ட போது ஆம் அமெரிக்க படைகள் நேரடியாக களம் காணும் என அதிபர் ஜோ பைடன் பதில் அளித்தார்.

இதுபற்றி வெள்ளி மாளிகையின் கொள்கை வகுக்கும் பிரிவின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது தைவானுக்கு ஆதரவாக படைகளை அனுப்புவது பற்றி இப்போது கூற முடியாது ஆனால் இருநாட்டு ஒப்பந்தத்தின்படி அமெரிக்கா ஆயுத உதவிகளை அளிக்கும் என தெரிவித்தார்.