AAD மற்றும் PDV அணு ஆயுத எதிர்ப்பு ஏவுகணைகள் தயாரிக்க BDL உடன் ஒப்பந்தம் !!

AAD – Advanced Air Defence இது இந்தியாவை நோக்கி வரும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் பூமியின வளிமண்டலத்திற்கு உள்ளே நுழைந்த பிறகு அவற்றை இடைமறித்து தாக்கி அழிக்க கூடியவை ஆகும் இதனை Endo Atmospheric ஏவுகணை என அழைக்கின்றனர்.

மேலும் இந்த வகை ஏவுகணைகள் 15 முதல் 30 கிலோமீட்டர் தொலைவு வரை பாய்ந்து சென்று இலக்குகளை தாக்கும் திறன் கொண்டவை என கூறப்படுகிறது.

PDV Prithvi Defence Vehicle அல்லது PAD Prithvi Air Defence பூமியின் வளிமண்டலத்திற்கு வெளியே இந்தியாவை தாக்க வரும் கண்டம் விட்டு கண்டம் பாயும் பலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் இரண்டு நிலை ஏவுகணை ஆகும்.

ஏற்கனவே நம்மிடம் சேவையில் உள்ள பிருத்வி ஏவுகணையை அடிப்படையாக கொண்ட அல்லது மேம்படுத்தப்பட்ட ரகமாகும், இந்த ஏவுகணை சுமார் 50 முதல் 80 கிலோமீட்டர் உயரம் வரை செல்லும் ஆகவே தான் இதனை Exo Atmospheric ஏவுகணை எனவும் அழைக்கிறார்கள்.

இந்த இரண்டு வகை ஏவுகணைகளும் இந்தியாவின் பல அடுக்கு BMD – Ballistic Missile Defence பலிஸ்டிக் ஏவுகணை தற்காப்பு அமைப்பின் முதல் அடுக்கின் அங்கம் என்பது கூடுதல் தகவல் ஆகும்.

இந்த ஏவுகணைகளை தயாரிக்க இந்திய பொதுத்துறை நிறுவனமான BDL Bharat Dynamics Limited அதாவது பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனம் ஆர்டர் பெற்றுள்ளது.

2022 – 2023 வாக்கில் முதல்கட்ட ஏவுகணைகள் தில்லி மற்றும் மும்பை பிராந்தியத்தை பாதுகாக்க ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில் களமிறக்கப்படும் கூடவே MFCR மற்றும் LRTR ரேடார்களும் நிலை நிறுத்தப்படும், பின்னர் படிப்படியாக நாடு முழுவதும் இவை களமிறக்கப்படும்.

இந்த நிலையில் நமது DRDO எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் 1500 முதல் 3000 கிலோமீட்டர் தொலைவு வரை பலிஸ்டிக் ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் AD-1 , AD-2 ஏவுகணைகளை இரண்டாம் கட்டத்தின் அங்கமாக உருவாக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.