அர்மீனியா மீது தீவிரமாக தாக்குதல் நடத்தும் அஸர்பெய்ஜான் படைகள் !!
அஸர்பெய்ஜான் நாட்டு படைகள் அர்மீனியா உடனான எல்லை முழுவதும் கடுமையான தாக்குதலை தொடங்கி உள்ளதாகவும் இதில் பலத்த உயிர் சேதம் மற்றும் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது எனவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வார்டெனிஸ், ஜெர்மூக் போன்ற அர்மீனிய நகரங்கள் மீதும் கோரிஸ், தாதெவ், சோடக், வெரின் ஷோர்ஸா, நோராபக், குட், மெட்ஸ் மஸ்ரிக் போன்ற கிராமங்கள் மீதும் அஸர்பெய்ஜான் படைகள் பிரங்கி மற்றும் மோர்ட்டார்களை கொண்டு தாக்குதல் நடத்தி வருகின்றன.
அதே நேரத்தில் அர்மீனிய நாட்டு படைகள் அஸர்பெய்ஜான் படைகள் முன்னேறி வரும் பகுதிகள், சாலைகள் உள்ளிட்ட பகுதிகளில் உடனடி தடுப்பு நடவடிக்கையாக கண்ணிவெடிகளை புதைத்து வருகின்றனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கபான், கோரிஸ், ஜெர்மூக் ஆகிய பகுதிகளை நோக்கி அஸர்பெய்ஜான் படைகள் முன்னேறி வரும் போதே அர்மீனியா படைகளுக்கு சொந்தமான இரண்டு S-300 அமைப்புகள் அஸர்பெய்ஜான் தாக்குதலில் அழிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிகிறது.