காரின் சக்கரத்தில் வெடிகுண்டு; ரஷ்ய அதிபர் புடினை கொல்ல முயற்சி ??

ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் பயணிக்கும் காரின் சக்கரத்தில் குண்டு பொருத்தப்பட்டு அதன் மூலமாக அவரை கொலை செய்ய சதி திட்டம் தீட்டபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

அதாவது சமீபத்தில் காரில் பயணிக்கும் போது தீடிரென ஒரு சக்கரத்தில் இருந்து பயங்கர சப்தம் கேட்டுள்ளது, காரும் நின்றுவிட சக்கரத்தில் இருந்து புகை வந்துள்ளது அனேகமாக வெடிகுண்டாக இருக்கலாம் ஆனால் சரியாக வெடிக்காமல் போயிருக்கலாம என கூறப்படுகிறது.

இதறை தொடர்ந்து புடின் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டார், அதனை தொடர்ந்து அவரது பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களின் தலைமை அதிகாரி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு விசாரணை வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

மேலும் ரஷ்யாவில் பலர் இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு உள்ளனர், உக்ரைன் போர் துவங்கியதில் இருந்தே ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடினை கொல்ல சதி திட்டங்கள் தீட்டப்படுவது அதிகரித்து உள்ளதாக பல நாளேடுகள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடினே ஒரு முறை ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது கடந்த 2017ஆம் ஆண்டு மட்டுமே தன்னை கொல்ல ஐந்து முறை தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தான் அவற்றிலிருந்து அதிர்ஷடவசமாக தப்பிவிட்டதாகவும் கூறியது குறிப்பிடத்தக்கது.