மத்திய பிரதேச மாநிலம் மொரேனா நகரத்தில் உள்ள பீம்ராவ் அம்பேத்கர் விளையாட்டு மைதானத்தில் ராணுவ தேர்வுக்கு தயாராகி வரும் இளைஞர்கள் தங்களை உடல் ரீதியாக தயார்படுத்தி கொள்வது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று இப்படி தேர்வுக்கு தயாராகி வந்த இளைஞர்கள் இரண்டு குழுவாக பிரிந்து ஏதோ பிரச்சினை காரணமாக கடுமையாக தடிகளுடன் மோதி கொண்டனர், மைதானத்தில் துப்பாக்கி சுடும் சப்தம் கேட்டதாகவும் அக்கம்பக்கத்தினர் கூறுகின்றனர்.
இதை தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் தடியடி நடத்தியும் துப்பாக்கி சூடு நடத்தியும் கலவரத்தை ஒடுக்கினர், இதையடுத்து 5 பேர் கைது செய்யப்பட்டனர், 4 பேர் காயமடைந்துள்ளனர்.