அர்ஜூன் மார்க்-1ஏ டாங்கிகளில் அதிநவீன இலக்குவைக்கும் அமைப்பு பொருத்த திட்டம் !!

  • Tamil Defense
  • September 30, 2022
  • Comments Off on அர்ஜூன் மார்க்-1ஏ டாங்கிகளில் அதிநவீன இலக்குவைக்கும் அமைப்பு பொருத்த திட்டம் !!

இந்திய பாதுகாப்பு அமைச்சகம் அர்ஜூன் மார்க்-1ஏ டாங்கிகளில் அதிநவீன இலக்குவைக்கும் கருவிகளை பொருத்த முடிவு செய்து அதற்கான ஒப்பந்தத்தை BEL Bharat Electronics Limited நிறுவனத்திற்கு வழங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை தொடர்ந்து EO FCS- Electro Optical Fire Control System எனப்படும் அதிநவீன தாக்குதல் கட்டுபாட்டு அமைப்பு , இதனை TONBO எனும் தனியார் நிறுவனம் சென்னையில் உள்ள BEL நிறுவனத்தின் தொழிற்சாலையுடன் இணைந்து தயாரித்து வருகிறது.

Elpeos தாக்குதல் கட்டுபாட்டு அமைப்பை Tonbo நிறுவனமானது தயாரித்து BEL நிறுவனத்திடம் ஒப்படைக்கும் அதனை அவர்கள் Arjun Mk 1A MBT அர்ஜூன் மார்க்-1ஏ பிரதான போர் டாங்கிகளில் இணைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ELPEOS அமைப்பில் ஒரு ஒருங்கிணைந்த பல திறன் சென்சார் உள்ளது இது துல்லியமாக இலக்கை அடையாளம் காண உதவும் இதனை டாங்கியில் உள்ள RCWS ரிமோட் மூலம்க இயங்கும் ஆயுத அமைப்பிற்கும் பயன்படுத்தி கொள்ள முடியும் என Tonbo நிறுவனம் தெரிவித்துள்ளது.