சீன விமானத்தின் தரம் குறித்து அர்ஜென்டினா கவலை, முன்னனியில் இந்திய தேஜாஸ் !!
சமீபத்தில் வெளியாகி உள்ள தகவலின்படி இந்த ஆண்டு சீனா சென்றிருந்த அர்ஜென்டினா விமானப்படையின் குழுவினர் சீனாவின் JF-17 விமானத்தின் தரத்தை குறித்து கவலை தெரிவித்ததாகவும்,
மேலும் அதில் ரஷ்ய என்ஜின் பயன்படுத்தி வரப்படுவதால் தற்போது ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளால் எதிர்காலத்தில் என்ஜின் தயாரிப்பு சப்ளை மற்றும் உதிரி பாகங்கள் சப்ளை தங்கு தடையின்றி நடைபெறும் வாய்ப்புகள் பற்றியும் கவலை தெரிவித்துள்ளனர்.
இது தவிர அமெரிக்காவும் அர்ஜென்டினாவுக்கு ரஷ்ய என்ஜின் பொருத்தப்பட்ட சீன விமானம் அல்லது ரஷ்ய விமானங்களை வாங்க வேண்டாம் மாறாக அமெரிக்க F-16 அல்லது அமெரிக்க என்ஜின் கொண்ட இந்திய தேஜாஸ் வாங்குமாறு அழுத்தம் கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இங்கிலாந்துக்கு அர்ஜென்டினா உடன் உள்ள பிரச்சினை காரணமாக பிரிட்டிஷ் தயாரிப்பு பாகங்களை கொண்ட போர் விமானங்களை அர்ஜென்டினாவுக்கு விற்பனை செய்வதற்கு இங்கிலாந்து தொடர்ந்து அனுமதி அளிக்காமல் பிரச்சினை செய்து வருகிறது.
இதனாலேயே அர்ஜென்டினா போர் விமானங்கள் வாங்க பல ஆண்டுகளாக திணறி வருகிறது தற்போது கூட ஸ்வீடன் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் பிரிட்டிஷ் அழுத்தம் காரணமாக இந்த போட்டியில் இருந்து பின்வாங்கி கொண்டன.
இந்த வாரம் அர்ஜென்டினா சென்றிருந்த இந்திய குழுவினர் அர்ஜென்டினா விமானப்படையின் தலைமை தளபதியை சந்தித்து இந்த பிரச்சினைகள் பற்றியும் விளக்கம் அளித்தனர் இதன் காரணமாக இந்தியாவின் தேஜாஸ் தற்போது போட்டியில் முன்னனியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.