அமைச்சர் ஜெய்ஷங்கரின் விமர்சனத்திற்கு பதிலடி அளித்த அமெரிக்கா ??
அமெரிக்கா சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்ஷங்கர் பாகிஸ்தானுக்கு பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக F-16 போர் விமானங்களுக்கு உதவுவதாக கூறி யாரை ஏமாற்ற பார்க்கிறீர்கள் என காட்டமாக விமர்சனம் முன்வைத்தார்.
இந்த நிலையில் இதற்கு அமெரிக்கா பதிலடி கொடுத்துள்ளது அமெரிக்க வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் நெட் ப்ரைஸ் கூறுகையில் இந்தியா பாகிஸ்தான் உடனான உறவு ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையது அல்ல இரண்டும் வெவ்வேறு எனவும்
இரு நாடுகளையும் கூட்டாளிகளாக மதிப்பதாகவும் பல சந்தர்ப்பங்களின் போது இரு நாடுகளுடன் அமெரிக்கா இணைந்து செயல்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஆஃப்கானிஸ்தான் போரில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளுக்கு உதவியதாக கூறி பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஏராளமான ராணுவ உதவிகளை வழங்கியது குறிப்பிடத்தக்கது.