தைவானுக்கு சென்ற அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு !!

அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோஸியின் தைவான் சுற்றுபயணம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு தைவான் சென்றுள்ளது.

தைவான் தலைநகர் தைபேய் நகரம் சென்றுள்ள அந்த எட்டு அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட அந்த குழு தைவான் அதிபர் சாய் இங் வென் அவர்களை சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனநாயக கட்சியை சேர்ந்த ஸ்டெஃபானி மர்ஃபி இந்த குழுவுக்கு தலைமை தாங்கி செல்கிறார், இவர் தான் தைவானுக்கு சுமார் 1 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை அளிக்க வழிவகை செய்யும் மசோதாவை தாக்கல் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திடீர் அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் தைவான் சுற்றுபயணமானது சீனாவை மேலும் கடுப்பேற்றும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.