இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாய்டு ஆஸ்டின் ஆகியோர் சமீபத்தில் காணொளி மூலமாக இருதரப்பு பேச்சுவார்த்தையை நடத்தினர்.
இந்த சந்திப்பின் போது அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் இந்தியாவின் ராணுவ நவீனமயமாக்கல் திட்டத்திற்கு தனது ஆதரவை தெரிவித்ததாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில் அமெரிக்கா மிக மிக முக்கியமான ஒரு தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு வழங்க முன்வந்துள்ளதாகவும் தற்போது இது என்ன என்பதை வெளியிட முடியாது எனவும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ராணுவ பார்வையாளர்கள் இது அனேகமாக MQ-9 Predator ஆயுத தாங்கிய ஆளில்லா விமானங்களாக இருக்கக்கூடும் எனவும் அதனை இந்தியாவிலேயே தயாரிக்க உதவும் வகையில் இதனை அறிவித்து இருக்கலாம் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த சந்திப்பின் போது இந்திய கடற்படையின் போர் விமான ஒப்பந்தத்தை பெறும் விதமாக அமெரிக்கா தனது Boeing FA -18 Suepr Hornet விமானத்துடன் கூடுதலாக பல்வேறு அதிநவீன ஆயுதங்களையும் தர முன்வந்துள்ளது.
அந்த வகையில் 160 கிலோமீட்டர் சென்று தாக்கும் AIM-120D AMRAAM வானிலக்கு ஏவுகணைகள், 925 கிலோமீட்டர் தூரம் சென்று தாக்கும் மேம்படுத்தப்பட்ட AGM – 158 JASSM ER தரை தாக்குதல் க்ரூஸ் ஏவுகணைகள் ஆகியவற்றையும் தர உள்ளதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.