அனைத்து சினூக் கனரக ஹெலிகாப்டர்களையும் பறக்க தடை விதித்த அமெரிக்கா; இந்தியா கவலை !!

  • Tamil Defense
  • September 1, 2022
  • Comments Off on அனைத்து சினூக் கனரக ஹெலிகாப்டர்களையும் பறக்க தடை விதித்த அமெரிக்கா; இந்தியா கவலை !!

அமெரிக்க தரைப்படை தன்னிடம் உள்ள அனைத்து போயிங் சினூக் Boeing CH-47 Chinook கனரக போக்குவரத்து ஹெலிகாப்டர்களையும் பறக்க தடை விதித்து நிறுத்தி வைத்துள்ளது.

அதாவது என்ஜினில் கோளாறு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதாகவும் ஏற்கனவே பல முறை சிறிய அளவு தீ விபத்துகள் என்ஜினில் ஏற்பட்டு உள்ளதாகவும் அதனாலேயே தான் சினூக் ஹெலிகாப்டர்களை நிறுத்தி வைத்துள்ளதாகவும் ஆனால் இதுவரை எவ்வித விபத்தோ உயிரிழப்போ ஏற்படவில்லை எனவும் அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.

அமெரிக்க தரைப்படை தற்போது இந்த பிரச்சனை காரணமாக நூற்றுக்கணக்கான ஹெலிகாப்டர்களை நிறுத்தி வைத்துள்ளது இந்த பிரச்சினை எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது தெரியவில்லை இதனால் பல நாடுகளில் உள்ள அமெரிக்க படைகளின் நடவடிக்கை பாதிக்கப்படும் எனும் அச்சம் எழுந்துள்ளது.

இந்திய விமானப்படையும் Boeing CH-47F ரக கனரக போக்குவரத்து ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி வருவதால் இந்த பிரச்சினை காரணமாக தனது கவலைகளை வெளிபடுத்தி உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.