அமெரிக்க ராணுவத்திற்கு ஹாலிவுட் IRON MAN பாணியிலான அதிநவீன கண்ணாடிகள் !!

பிரபல மென்பொருள் மற்றும் தொழில்நுட்ப தயாரிப்பு நிறுவனமான Microsoft Corporation அமெரிக்க தரைப்படைக்கு சுமார் 5000 அடுத்த தலைமுறை அதிநவீன சண்டை கணிணிகளை டெலிவரி செய்வதற்கு கொள்முதலுக்கான இணை செயலர் டவ்களஸ் புஷ் அனுமதி அளித்துள்ளார்.

இதற்கு முன்னர் இவற்றின் டெலிவரி பல்வேறு கோளாறுகள் மற்றும் திறன் போதாமை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது கடின சோதனைகளுக்கு பிறகு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

MICROSOFT நிறுவனம் தயாரித்துள்ள இந்த சண்டை கண்ணாடிகள் IVAS – Integrated Visual Augmentation System அதாவது ஒருங்கிணைந்த பார்வை திறன் அதிகரிப்பு அமைப்பு என அழைக்கப்படுகிறது சுருக்கமாக ஐவாஸ் என அழைக்கிறார்கள்.

இந்த அமைப்பு ஒரு ஸ்மார்ட் பார்வை அமைப்பாக செயல்படும், ஹாலிவுட் படங்கள் குறிப்பாக Iron Man கதாபாத்திரம் பயன்படுத்தும் டிஸ்பிளே போன்று இது இருக்கும் அதற்கு Microsoft Hololens உதவுகிறது, மேலும் இரவில் பார்க்கவும், வெப்ப உணர் பார்வை Thermal Imaging அளிக்கவும் இதனால் முடியும்.

அமெரிக்க தரைப்படை அடுத்த பத்தாண்டுகளில் சுமார் 21 பில்லியன் அமெரிக்க டாலர்களை இந்த Microsoft IVAS ஸ்மார்ட் கண்ணாடிகள், அவற்றிற்கான உதிரி பாகங்கள், தொழில்நுட்ப சேவை ஆகியவற்றை பெற செலவிட உள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது மேற்குறிப்பிட்ட 5000 Microsoft IVAS ஸ்மார்ட் சண்டை கண்ணாடிகளும் சுமார் 373 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் வாங்கப்பட உள்ளன இதற்கான ஆர்டர் கடந்த ஆண்டு இறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது ஆகும்.