ஜப்பானுக்கு எதிராக இணைந்த முன்னர் தைவானும் சீனாவும் இணைந்து செயல்பட்ட வரலாற்று கதை !!

கடந்த 2012ஆம் ஆண்டு செப்டம்பர் 25 அன்று ஐம்பத்தி எட்டு தைவான் மீன்பிடி படகுகள், 12 தைவான் கடலோர காவல்படை கலன்கள், 21 ஜப்பான் கடலோர காவல்படை கலன்கள் மற்றும் சீன கடலோர காவல்படை கலன்கள் கலந்து கொண்ட மிகப்பெரிய மோதல் ஒன்று நடைபெற்றது.

புவிசார் அரசியலில் எப்போது வேண்டுமானாலும் காட்சிகள் மாறலாம் என்பதற்கு உதாரணமாக இந்த நிகழ்வு அமைந்தது காரணம் இந்த சம்பவத்தில் பரம எதிரிகளான சீனா மற்றும் தைவான் ஒரணியில் நின்று ஜப்பானை சென்காகு தீவுகள் சார்ந்த பிரச்சினையில் எதிர்த்தன இந்த மோதல் 2012ஆம் ஆண்டு ஜப்பான் அரசு சென்காகு தீவுகளை நாட்டுடமை ஆக்கிய போது உச்சக்கடத்தை எட்டியது.

இதனையடுத்து தைவானிய மீனவர்கள் தங்களது மீன்பிடி உரிமைகளை நிலைநாட்டும் விதமாக தைவான் கடற்படை மற்றும் கடலோர காவல்படை உதவியுடன் சென்காகு தீவுகளை நோக்கி புறப்பட்டனர் சீன கடலோர காவல்படை கண்காணிப்பு கப்பல்களும் சற்றே தொலைவில் பின்தொடர்ந்து சென்றன.

செப்டம்பர் 23ஆம் தேதி சுமார் 90 கலன்கள் அடங்கிய மிகப்பெரிய படை ஒன்று புறப்பட்ட நிலையில் அடுத்த நாள் காலை ஐந்து மணியளவில் சென்காகு தீவுகளில் இருந்து 18 கடல்மைல்கள் தொலைவில் வந்த போது அங்கு ஜப்பானிய கடற்படையின் கலன்கள் தைவான் மற்றும் சீன கலன்களை தடுத்தன.

இதை தொடர்ந்து மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது இந்த மோதலில் இரண்டு தரப்பை சேர்ந்த கலன்களும் தண்ணீர் பீய்ச்சி அடித்தும், முட்டை வீசியும், ஒலி பெருக்கிகள் வைத்து ஒலி எழுப்பியும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர், இதற்கிடையே ஜப்பான் கலன்கள் மோதி உடைக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.