இந்தியாவின் முதலாவது முப்படை தலைமை தளபதியான ஜெனரல் பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த சுமார் ஒன்பது மாதங்கள் கழித்து நாட்டின் இரண்டாவது முப்படைகள் தலைமை தளபதியாக ஒய்வு பெற்ற தரைப்படை அதிகாரி லெஃப்டினன்ட் ஜெனரல் அனில் சவுஹான் நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய பாதுகாப்பு அகாடமி, இந்திய ராணுவ அகாடமியில் பயிற்சி முடித்துவிட்டு இந்திய தரைப்படையின் 11 கோர்க்கா ரைஃபிள்ஸ் ரெஜிமென்ட்டில் பணியில் இணைந்த அவர் சுமார் 40 ஆண்டுகள் தேச சேவையாற்றி உள்ளார், தனது பணிக்காலத்தில் ஜம்மு […]
Read Moreஉலகின் இரண்டு மிகப்பெரிய ஜனநாயக நாடுகளான இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான உறவானது இருதரப்பு நலன்களை மட்டுமே சார்ந்தது அல்ல என இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்ஷங்கர் கூறியுள்ளார். மேலும் அவர் பேசுகையில் இரண்டு நாடுகளும் தங்களுக்கு இடையிலான உறவின் முக்கியத்துவம், அதன் நன்மைகள், திறன்களை பற்றி நன்கு உணர்ந்துள்ளதாகவும் இருதரப்பு உறவுகள் வளர்ச்சி அடைவதற்கு இனியும் பிரகாசமான வாய்ப்புகள் உள்ளதாகவும் இந்திய அமெரிக்க உறவை எடுத்துக்கொண்டு நன்கு கவனித்தால் அதன் முக்கியத்துவம் புரியும் […]
Read Moreஇந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கொள்முதல் பிரிவானது தரை தாக்குதல் மற்றும் கப்பல் எதிர்ப்பு என இரட்டை பயன்பாடு கொண்ட தாக்குதல் தொலைவு நீட்டிக்கப்பட்ட பிரம்மாஸ் ஏவுகணைகளை இந்திய கடற்படைக்காக வாங்க பிரம்மாஸ் ஏரோஸ்பேஸ் லிமிட்டட் Brahmos Aerospace Limited நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்திய கடற்படையின் புத்தம் புதிய போர் கப்பலான INS Visakhapatnam விசாகப்பட்டினம் கடந்த ஜனவரி மாதம் இந்த தாக்குதல் தொலைவு நீட்டிக்கப்பட்ட பிரம்மாஸ் ஏவுகணையை ஏவி வெற்றிகரமாக சோதனை செய்தது. தற்போது இந்திய […]
Read Moreஅமெரிக்க பாதுகாப்பு அமைச்சகமானது உக்ரைனுக்கான ராணுவ உதவியாக சுமார் 1.1 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஆயுத உதவி திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி உக்ரைனுக்கு 18 HIMARS High Mobility Artillery Rocket Systems எனப்படும் பல குழல் ராக்கெட் லாஞ்சர்கள் 150 HMMWVS Armoured High Mobility Multipurpose Wheeled Vehicles எனப்படும் நான்கு சக்கர கவச வாகனங்கள், 150 இதர வாகனங்கள், கனரக தளவாடங்களை நகர்த்த உதவும் 80 கனரக லாரிகள் மற்றும் 40 கனரக […]
Read Moreஇந்தியாவின் இரண்டாவது முப்படை தலைமை தளபதியாக லெஃப்டினன்ட் ஜெனரல் அனில் சவுஹான் அவர்களை நியமனம் செய்து இந்திய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் அவர் தேர்வு செய்யப்பட்டதற்கான 6 முக்கிய காரணிகள் முன்வைக்கப்படுகின்றன. புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்தியா விமானப்படை மூலமாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பாலகோட் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்திய பிறகு இந்திய பாகிஸ்தான் எல்லையோரம் நிலவிய போர் பதட்ட சூழல் மற்றும் போர் தயார்நிலை மேலாண்மையை லெஃப்டினன்ட் ஜெனரல் அனில் சவுஹான் […]
Read Moreஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் காஷ்மீர் பிராந்தியத்தில் குல்காம் அருகேயுள்ள அஹ்வாத்தூ எனும் பகுதியில் இரண்டு பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்து தகவலையடுத்து பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது ஒரு வீட்டில் குல்காம் அருகேயுள்ள பட்டபோரா கிராமத்தை சேர்ந்த மொஹம்மது ஷாஃபி கனாய் மற்றும் குல்காம் அருகேயுள்ள டாகியா கோபால்போரா பகுதியை சேர்ந்த மொஹம்மது ஆசிஃப் வானி ஆகிய இரண்டு ஜெய்ஷ் இ மொஹம்மது அமைப்பின் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பது தெரிய […]
Read Moreஅர்மீனியா மற்றும் அஸர்பெய்ஜான் இடையேயான போர் நடைபெற்று வரும் நேரத்தில் இந்தியா அர்மீனியா நாட்டிற்கு உடனடியாக சுமார் 2000 கோடி மதிப்பிலான ஆயுதங்களை ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. அவசரகால அடிப்படையில் இரு நாட்டு அரசுகளும் இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டு உள்ளன. அதன்படி ராக்கெட்டுகள், ஏவுகணைகள் மற்றும் பல்வேறு வகையான குண்டுகள் அர்மீனியாவுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன குறிப்பாக பினாகா பல குழல் ராக்கெட் லாஞ்சர்கள் மற்றும் ராக்கெட்டுகள் முதல்முறையாக ஏற்றுமதி செய்யப்பட உள்ளன. டாங்கிகளை அழிக்கும் […]
Read Moreஸ்வீடன் நாட்டை சேர்ந்த SAAB சாப் நிறுவனமானது தனது Carl Gustaf M4 ரக ராக்கெட் லாஞ்சர்களை இந்தியாவில் தயாரிக்க முடிவு செய்துள்ளது, இதுவரை இந்தியாவை தவிர உலகில் வேறேந்த நாட்டிலும் இதை ஸ்வீடன் செய்யவில்லை. இதற்காக தற்போது இந்தியாவில் சாப் நிறுவனமானது SAAB FFV India எனும் நிறுவனத்தை துவங்க உள்ளது தற்போது இந்த நிறுவனம் பதிவு செய்யும் நிலையில் உள்ளதாகவும் ஒரு தொழிற்சாலை இதற்கென அமைக்கப்பட உள்ளதாகவும் சாப் நிறுவனத்தின் விற்பனை பிரிவு தலைவர் […]
Read More