துருக்கி நாட்டின் Baykar பெய்கார் ஒரு ஆளில்லா விமான தயாரிப்பு நிறுவனமாகும் இந்த நிறுவனத்தின் ஆளில்லா விமானங்கள் உலகளாவிய ரீதியில் பிரசித்தி பெற்றவை ஆகும்.
குறிப்பாக Baykar Byratkar Akinci மற்றும் Baykar Byratkar TB2 ஆகியவை பிரசத்தி பெற்றவை ஆகும், இதில் Byratkar TB2 ரக ஆளில்லா விமானம் அஸர்பெய்ஜான் சிரியா மற்றும் உக்ரைன் நாடுகளில் நடைபெற்ற போர்களில் சிறப்பாக செயல்பட்டு பல உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது.
இந்த நிலையில் Baykar பெய்கார் நிறுவனத்தின் தொழில்நுட்ப இயக்குனர் சமீபத்தில் பேசும்போது ஐரோப்பா, கிழக்காசியாவை சேரந்த 24 நாடுகள் Byratkar TB2 ஆளில்லா விமானத்தை வாங்க ஆர்வம் காட்டி உள்ளதாகவும்,
இனியும் பல நாடுகள் ஆர்வம் காட்டி வருவதாகவும் நாளுக்கு நாள் பட்டியல் பெரிதாகி வருவதாகவும் அதாவது இனி ஆர்டர் கொடுக்கும் நாடுகள் சுமார் மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில் Byratkar Akinci ரக ஆளில்லா விமானங்களை வாங்க 4 நாடுகள் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் ஆனால் பெயரை வெளியிட முடியாது எனவும் தெரிவித்தார், இந்த வகை ட்ரோன் தற்போது துருக்கி தவிர அஸர்பெய்ஜான் மற்றும் பாகிஸ்தான் படைகளில் பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.