Day: September 3, 2022

சினூக் ஹெலிகாப்டர்களில் கோளாறு அமெரிக்காவிடம் விளக்கம் கேட்ட இந்தியா !!

September 3, 2022

அமெரிக்க தரைப்படை தன்னிடம் உள்ள நூற்றுக்கணக்கான Boeing CH-47 Chinook சினூக் கனரக ஹெலிகாப்டர்களை என்ஜினில் ஏதோ கோளாறு காரணமாக தீவிபத்து ஏற்படுவதாக கூறி பறக்க தடை விதித்து தரையில் நிறுத்தி வைத்தது. இந்த நிலையில் இது பற்றிய உயர் மட்ட விசாரணைக்கு அமெரிக்க தரைப்படை உத்தரவிட்டு விசாரணை நடத்தப்பட்டதில் என்ஜினில் எரிபொருள் கசிவு ஏற்பட்டு அதன் காரணமாகவே தீவிபத்து ஏற்படுவதாக கண்டறியப்பட்டது. இந்த நிலையில் இந்திய விமானப்படையும் 15 Boeing CH-47F Chinook சினூக் கனரக […]

Read More

ரஷ்யா நடத்தும் கடல்சார் போர் பயிற்சியில் கலந்து கொள்ள மறுத்த இந்தியா; காரணம் என்ன ??

September 3, 2022

ரஷ்யாவில் நேற்று துவங்கிய VOSTOK 2022 ராணுவ போர் பயிற்சிகள் வருகிற 7ஆம் தேதி வரை நடைபெற உள்ளன, இதில் இந்தியாவும் கலந்து கொள்கிறது. பல நாடுகளை சேர்ந்த சுமார் 50,000 வீரர்கள், 140 வெவ்வேறு வகையான வானூர்திகள் மற்றும் 60 வெவ்வேறு வகையான கடற்படை கலன்கள் பங்கு பெறும் நிலையில் இந்த பயிற்சிகள் ரஷ்யாவின் கிழக்கு பகுதியிலும், ஓகொட்ஸ்க் மற்றும் ஜப்பான் கடல் பகுதிகளில் நடைபெற உள்ளன. இந்தியா இதில் தரைப்பகுதி போர் பயிற்சிகளில் மட்டுமே […]

Read More

ஆம்கா மற்றும் அடுத்த தலைமுறை தாக்குதல் நீர்மூழ்கி தயாரிக்க இந்தியாவுக்கு உதவ தயார் ஜப்பான் !!

September 3, 2022

கடந்த இரண்டு நாட்களாக இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளை சேர்ந்த பாதுகாப்பு தொழில்துறை இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன, இது இரு தரப்பு பாதுகாப்பு துறை ஒத்துழைப்பினை அதிகரிக்கும் நோக்கத்தோடு நடத்தப்படும் நிகழ்ச்சி ஆகும். மேற்குறிப்பிட்ட இரு தரப்பு பேச்சுவார்த்தைகளின் முடிவில் தற்போது இந்தியா மற்றும் ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகங்கள் பல்வேறு திட்டங்களில் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் ஜப்பான் மேக் இன் இந்தியா திட்டத்தில் பங்குதாரர் ஆக விரும்புவதாகவும் அதன் […]

Read More

2024 வாக்கில் சுதேசி கடற்படை இரட்டை என்ஜின் விமானத்திற்கு முக்கிய அனுமதி !!

September 3, 2022

இந்திய கடற்படைக்கென உள்நாட்டிலேயே பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டு வரும் போர் விமானம் தான் கடற்படை இரட்டை என்ஜின் போர் விமானம் ஆங்கிலத்தில் TEDBF Twin Engine Deck Based Fighter என அழைக்கப்படுகிறது. இந்திய கடற்படையின் திட்ட அலுவலகம் மற்றும் வானூர்தி மேம்பாட்டு முகமை ஆகியவை இணைந்து ஆரம்பக்கட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளன, அந்த வகையில் 2023ஆம் ஆண்டு வாக்கில் முக்கிய அனுமதிகளை பெறவும் திட்டங்கள் வகுக்கப்பட்டு உள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன. வானூர்தி மேம்பாட்டு முகமை ADA முதல்கட்ட […]

Read More

முதல்முறையாக சீன ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்திய தைவான் !!

September 3, 2022

கடந்த வியாழக்கிழமை அன்று தைவான் ராணுவம் வரலாற்றில் முதல்முறையாக தனது வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த சீன ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளது. சீனாவை ஒட்டியுள்ள தைவானுடைய கின்மென் தீவின் வான் பகுதியில் சீனாவை சேர்ந்த ஆளில்லா விமானம் அத்துமீறி நுழைந்த போது அந்த தீவு பகுதியை பாதுகாக்கும் தைவான் ராணுவத்தின் கின்மென் பாதுகாப்பு கட்டளையகம் அந்த ஆளில்லா விமானத்தை தாக்கி அழித்துள்ளதாகவும் சுட்டு வீழ்த்தப்பட்டது ராணுவ ட்ரோன் அல்ல ஆனால் உளவு மற்றும் கண்காணிப்பு பணிகளை […]

Read More

கொச்சி கடற்படை கப்பல் பராமரிப்பு பணிமனையில் வேலைவாய்ப்பு !!

September 3, 2022

கொச்சி நகரில் உள்ள இந்திய கடற்படையின் கப்பல் பராமரிப்பு பணிமனையில் சுமார் 230 Apprentice காலி பணி இடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கை வெளியாகி உள்ளது. அங்கீகாரம் பெற்ற பள்ளியில் 10ஆம் வகுப்பில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது தகுந்த ITI பாடப்பிரிவில் 65% மதிப்பெண்களுடன் அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் பயின்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம். அதிகபட்ச வயது வரம்பு 21 ஆகும், சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு வயது வரம்பு தளர்ச்சி அளிக்கப்படும், விண்ணப்ப […]

Read More

உலகம் முழுவதும் இருந்து துருக்கி ட்ரோன் மீது ஆர்வம் காட்டிய 24 நாடுகள் !!

September 3, 2022

துருக்கி நாட்டின் Baykar பெய்கார் ஒரு ஆளில்லா விமான தயாரிப்பு நிறுவனமாகும் இந்த நிறுவனத்தின் ஆளில்லா விமானங்கள் உலகளாவிய ரீதியில் பிரசித்தி பெற்றவை ஆகும். குறிப்பாக Baykar Byratkar Akinci மற்றும் Baykar Byratkar TB2 ஆகியவை பிரசத்தி பெற்றவை ஆகும், இதில் Byratkar TB2 ரக ஆளில்லா விமானம் அஸர்பெய்ஜான் சிரியா மற்றும் உக்ரைன் நாடுகளில் நடைபெற்ற போர்களில் சிறப்பாக செயல்பட்டு பல உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில் Baykar பெய்கார் நிறுவனத்தின் […]

Read More

அமெரிக்கா தென்கொரியா ஜப்பான் இடையே விரைவில் முத்தரப்பு பேச்சுவார்த்தை !!

September 3, 2022

அமெரிக்கா ஜப்பான் மற்றும் தென் கொரிய நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. அதன்படி அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், தென் கொரிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கிம் சூங் ஹான் மற்றும் ஜப்பான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அகிபா டகேயோ ஆகியோர் இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தின் தலைநகரான ஹோனலூலூ நகரில் அமைந்துள்ள […]

Read More

இந்தியாவுக்கு வான் பாதுகாப்பு ரேடார்களை டெலிவரி செய்த இஸ்ரேல் !!

September 3, 2022

இந்தியா தரைப்படைக்கான Sky Capture ஸ்கை கேப்சர் வான் பாதுகாப்பு ரேடார்களை இஸ்ரேலுடைய இஸ்ரேலிய ஏரோஸ்பேஸ் தொழிற்சாலை நிறுவனம் டெலிவரி செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 550 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான இத்தகைய 66 வான் பாதுகாப்பு ரேடார்களை இந்தியாவின் ஆல்ஃபா Alpha நிறுவனத்துடன் இணைந்து தொழில்நுட்ப பரிமாற்ற அடிப்படையில் தயாரித்து டெலிவரி செய்துள்ளது, இதற்கான ஒப்பந்தம் கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கையெழுத்தானது. இந்த வான் பாதுகாப்பு ரேடார்களை கொண்டு VSHORAD அதாவது […]

Read More