பிரம்மாஸ்-2ல் ரஷ்ய ஸிர்கான் ஏவுகணையின் பாகங்கள் !!!

  • Tamil Defense
  • August 4, 2022
  • Comments Off on பிரம்மாஸ்-2ல் ரஷ்ய ஸிர்கான் ஏவுகணையின் பாகங்கள் !!!

TASS ஊடகம் வெளியிட்டுள்ள செய்திகட்டுரையில் இந்தியாவின் பிரம்மாஸ்-2 BRAHMOS-2 அதாவது ஹைப்பர்சானிக் வடிவத்தில் ரஷ்யாவின் ஸிர்கான் ஹைப்பர்சானிக் ஏவுகணை பாகங்கள் இணைக்கப்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஏவுகணை ரஷ்யாவின் மெஷினோஸ்ட்ரோனியா NPO Mashinostroeniya மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் DRDO ஆகியவற்றால் இணைந்து தயாரிக்கப்பட்டு வருகிறது, ஆகவே Brahmos-2 ரஷ்யா Tsirkon ஏவுகணைக்கு ஒத்த செயல்திறனை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

அதே போல் Brahmos Aerospace Limited நிறுவனத்தின் தலைவர் அதூல் ராணே பிரம்மாஸ்-2வின் விலை மதிப்பு அதிகமாகும் எனவும் இனியும் ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளில் முதல்முறையாக சோதனை நடைபெறும் எனவும் தெரிவித்தார்.

இந்தியா தற்போது ஏவுகணை தொழில்நுட்ப கட்டுபாட்டு அமைப்பில் உறுப்பினராக இருப்பதால் சில கட்டுபாட்டுகள் இருக்கும் எனவும் அதூல் ராணே தெரிவித்தார்.