ஆம்கா விமானத்தின் காற்று சுரங்க மாதிரி வெளியானது என்னென்ன அம்சங்கள் ஒரு பார்வை !!

  • Tamil Defense
  • August 9, 2022
  • Comments Off on ஆம்கா விமானத்தின் காற்று சுரங்க மாதிரி வெளியானது என்னென்ன அம்சங்கள் ஒரு பார்வை !!

ஆம்கா மார்க் 1 போர் விமானத்தின் IWTM – Integrated Wind Tunnel Model உடைய புகைப்படம் சமீபத்தில் வெளியாகி பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது.

இதன்மூலம் ஆம்கா மார்க்-1 விமானத்தில் உள்ள சிறப்பம்சங்கள் தெரிய வந்துள்ளதாக ராணுவ நிபுணர்கள் கூறுகின்றனர் அத்தகைய சில விஷயங்களை தற்போது பார்க்கலாம்.

அந்த வகையில் DSI – Divertless Supersonic Inlet மற்றும் என்ஜினுடைய பிளேடுகள் ரேடார் சிக்னல்களை பிரதபலிக்காமல் தடுக்கும் BUMP எனப்படும் அமைப்பு ஆகியவை உள்ளன.

மேலும் AESA – Active Electronically Scanned Array Radar மற்றும் விமானத்தின் மூக்கு பகுதியில் ஒரு சிறிய கம்பம் போன்ற அமைப்பின் மேலே பொருத்தப்பட்ட IRST – Infra Red Search & Track சென்சார் அமைப்பு ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.

விமானிகள் இருக்கும் பகுதிக்கு பின்னால், மேல் இடது பகுதியில் ஒரு உட்புற இயந்திர துப்பாக்கி அமைப்பு இருக்கிறது அதிகபட்சமாக இது 23 மில்லிமீட்டர் அளவு கொண்ட இயந்திர துப்பாக்கி ஆக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

பின்னர் விமானத்தின் குறுக்கு பகுதியில் மற்றொரு அமைப்பு காணப்படுகிறது இது அனேகமாக MAWS – Missile Approach Warning System ஏவுகணை எச்சரிக்கை அமைப்பு அல்லது எரிபொருள் நிரப்பும் அமைப்பு ஆக இருக்கலாம் எனவும்

ஒருவேளை இது MAWS அமைப்பாக இருந்தால் F-35 விமானத்தில் உள்ளதை போன்ற அனைத்து சென்சார்களையும் ஒருங்கிணைத்து 360 டிகிர சுற்றளவில் தகவல்களை தரக்கூடிய DAS – Digital Aperture System உம் இந்த விமானத்தில் இருக்கலாம்.

விமானத்தில் பின்புறத்தில் இரண்டு என்ஜின்களுக்கும் நடுவே APU – Auxillary Power Unit Cooling intake காணப்படுகிறது அதாவது இது விமானத்தில் உள்ள மின்னனு அமைப்புகளை குளிர்விக்கும் அமைப்பு ஆகும்.

விமானத்தில் உள்ள IRST சென்சார் நிறுவப்பட்டுள்ள கம்பம் போன்ற அமைப்பு மற்ற விமானங்களில் கிடையாது இது ஸ்டெல்த் தன்மையை பாதிக்கும் எனவும் , விமானத்தின் நாடியில் EOTS அமைப்பு இல்லாதது விமானத்தின் வெளிப்புறம் Targeting Pod எனும் கருவியை பொருத்த வேண்டிய நிலையை உருவாக்கும் அதனால் ஸ்டெல்த தன்மை பாதிக்கப்படும்.

F35, F22, J-20 போன்ற ஸ்டெல்த் போர் விமானங்களில் இந்த EOTS – Electro-Optical Targeting System நாடிப்பகுதியில் காணப்படுகிறது, இதே அமைப்பு IRST சென்சார் ஆகவும் செயல்பட வல்லது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி இந்த IWTM ஆம்கா மார்க்-1 போர் விமானத்தின் பல்வேறு மிக முக்கியமான அம்சங்களை வெளிபடுத்துவதாக அமைந்துள்ளது என்றால் மிகையல்ல.