இங்கிலாந்து இந்திய விமானப்படைகள் இடையே இருதரப்பு போர் பயிற்சி !!
1 min read

இங்கிலாந்து இந்திய விமானப்படைகள் இடையே இருதரப்பு போர் பயிற்சி !!

இங்கிலாந்து விமானப்படையின் யூரோஃபைட்டர் டைஃபூன் Eurufighter Typhoon போர் விமானங்கள் மற்றும் ஒரு Airbus A340/330 Voyager KC எரிபொருள் டேங்கர் ஆகியவை ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் Pitch Black பன்னாட்டு பயிற்சியில் பங்கு பெற்றுள்ளன.

RAF Typhoon

அவை இங்கிலாந்து நோக்கி திரும்பி செல்லும் வழியில் இந்தியா வர உள்ளன, பின்னர் இந்திய விமானப்படையுடன் இணைந்து இருதரப்பு போர் ஒத்திகைகளை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Airbus A340/330 Voyager KC

இங்கிலாந்து விமானப்படையினர் ஆஸ்திரேலியா செல்லும் போது கூட இந்தியா வந்தனர் பின்னர் எரிபொருள் நிரப்பி கொண்டு சிங்கப்பூர் சென்று அங்கிருந்து ஆஸ்திரேலியா சென்றனர், இங்கிலாந்து சுமார் 15,900 கிலோமீட்டர் தொலைவு பயணத்தை மேற்கொள்ள உள்ளனர்.

வருகிற செப்டம்பர் 20ஆம் தேதி இந்த இருதரப்பு போர் ஒத்திகைகள் துவங்க உள்ளன இது அனேகமாக இரு நாட்டு விமானப்படைகளும் வழக்கமாக மேற்கொள்ளும் இந்திராதனுஷ் பயிற்சியாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்திராதனுஷ் போர் பயிற்சி கடந்த 2006ஆம் ஆண்டு துவங்கிய நிலையில் 2006,2007,2010,2015 ஆகிய நான்கு வருடங்கள் மட்டுமே இந்த இருதரப்பு பயிற்சிகள் நடைபெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.