இந்தியா மற்றும் இஸ்ரேல் கூட்டாக தயாரித்த வான் பாதுகாப்பு ஏவுகணையான Barak 8 மீது வியட்நாம் ஆர்வம் காட்டி வருகிறது, அதோடு நிற்காமல் அதனை வாங்குவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன.
ஏற்கனவே வியட்நாம் விமானப்படை இஸ்ரேலின் Rafael நிறுவனம் தயாரித்த Spyder வான் பாதுகாப்பு அமைப்புகளை பயன்படுத்தி வருகிறது ஆனால் ஏதோ ஒரு வகையில் திருப்தி அடையாத நிலையில் Barak 8 மீது கவனம் திரும்பி உள்ளது.
அதனால் தற்போது வியட்நாம் விமானப்படை Rafael நிறுவனத்தின் மூன்று Spyder வான் பாதுகாப்பு அமைப்புகளின் ஆஃபரையும் மீறி இந்திய இஸ்ரேல் கூட்டு தயாரிப்பான Barak 8 மீது ஆர்வம் காட்டி வருகிறது.
இதற்காக விரைவில் வியட்நாம் விமானப்படையின் துணை தளபதியும் அந்நாட்டு வான் பாதுகாப்பு படைகளின் கமாண்டருமான மூத்த ராணுவ அதிகாரி தலைமையிலான குழு இஸ்ரேல் செல்ல உள்ளது, அங்கு இஸ்ரேல் விமானப்படையின் துணை தளபதி மற்றும் இஸ்ரேல் வான் பாதுகாப்பு படைகளின் தளபதியான மூத்த அதிகாரியை சந்தித்து பேச உள்ளனர்.
வியட்நாம் போன்ற நாடுகள் Barak 8 மற்றும் Brahmos ஏவுகணைகளை கொண்டு சீனா அமெரிக்க கடற்படைக்கு எதிராக தென் சீன கடல் பகுதியில் உருவாக்கி உள்ள வான் பாதுகாப்பு பகுதி போன்ற ஒரு வான் பாதுகாப்பு பகுதியை உருவாக்கி கொள்ள முடியும் என்பது இதன் சிறப்பு.
பராக் 8 ஏவுகணையை இஸ்ரேலிய ஏரோஸ்பேஸ் தொழிற்சாலை IAI, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு இயக்குனரகம், Rafael Advanced Systems, Elta Systems மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் DRDO ஆகிய அமைப்புகள் இணைந்து உருவாக்கி உள்ளன.
மேலும் பராக்-8 Barak 8 ஏவுகணையை இஸ்ரேலின் Rafael Advanced Systems மற்றும் இந்தியாவின் Kalyani Group மற்றும் Bharat Dynamics Limited BDL ஆகியவை KRAS எனும் கூட்டு தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கி தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது ஆகும்.