ஜப்பான் மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த சில ராணுவம் சார்ந்த செய்தி வெளியிடும் சில ஊடகங்கள் இந்தியா வெளியே தெரியாமல் அமெரிக்காவுடன் F-35 ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்தி வெளியிட்டுள்ளன.
அதாவது இஸ்ரேலுக்கு வழங்கப்பட்ட F-35 விமானம் உலகில் உள்ள மற்ற அனைத்து F-35 விமானங்களையும் விட அதிநவீனமானது ஆகும், இது முற்றிலும் வேறுபட்டது.
அமெரிக்க தழில்நுட்பங்களை மாற்றி விட்டு இஸ்ரேலிய தொழில்நுட்பங்கள் பலவற்றை உட்புகுத்தி முற்றிலும் வேறுபட்ட மேம்படுத்தப்பட்ட ஒரு F-35 விமானத்தை தான் இஸ்ரேலிய விமானப்படை பயன்படுத்தி வருகிறது, இதனை F35 ADIR என இஸ்ரேல் அழைக்கிறது.
அந்த வகையில் இந்தியாவுக்கும் ஒரு முற்றிலும் வேறுபட்ட F-35 போர் விமானத்தை விற்க அமெரிக்கா முன்வந்துள்ளதாகவும், இதில் இஸ்ரேல் தவிர மற்ற நாடுகளுக்கு அனுமதிக்கப்படாத பல முக்கிய அமெரிக்க அமைப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களை மாற்றி இந்திய சுதேசி தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் அமைப்புகளை இணைக்க அனுமதி அளிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
இந்த விமானத்தில் இந்திய ஆயுதங்கள், இந்திய மின்னனு போர் அமைப்பு, இந்திய ஏவியானிக்ஸ், இந்திய மென்பொருள் ஆகியவையும் இது தவிர அமெரிக்காவின் அனுமதி இல்லாமலேயே விமானத்தை மேம்படுத்தும் அனுமதியும் இந்தியாவுக்கு அளிக்கப்படும் என தெரிகிறது.
இந்த F-35 விமானத்தை தயாரிக்கும் Lockheed Martin லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் மற்ற நாடுகளுக்கு முழுமையாக விமானத்தை விற்பனை செய்தது போலின்றி இந்தியாவுக்கு தனித்தனி பாகங்களாக ஏற்றுமதி செய்யும், இங்கு ஒரு கூட்டாளி இந்திய நிறுவனம் முலமாக இந்தியாவிலேயே அஸெம்பிள் செய்யப்படும் எனவும் மேற்குறிப்பிட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த பிரத்தியேக இந்திய F-35 ஐந்தாம் தலைமுறை போர் விமானம் F-35I அதாவது F-35 India என அழைக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது, இந்தியாவுக்கு ஐந்தாம் தலைமுறை விமானங்கள் நிச்சயமாக தேவை காரணம் சீனா இத்தகையை விமானங்களை பயன்படுத்தி வருவது மட்டுமின்றி பாகிஸ்தானுக்கும் ஏற்றுமதி செய்ய வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.