தைவான் ஜலசந்தியில் பயணிக்க உள்ள அமெரிக்க கடற்படை !!

  • Tamil Defense
  • August 11, 2022
  • Comments Off on தைவான் ஜலசந்தியில் பயணிக்க உள்ள அமெரிக்க கடற்படை !!

வரும் நாட்களில் அமெரிக்க கடற்படை சீனா மற்றும் தைவான் இடையே உள்ள தைவான் ஜலசந்தியில் போர் கப்பல்களை சுதந்திமான கடல்பகுதி கொள்கையை நிலைநாட்டும் விதமாக அனுப்ப உள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அமெரிக்க பாதுகாப்பு துறை கொள்கை இணை செயலர் காலின் காஹ்ல் சமீபத்தில் ஊடகங்களிடம் பேசும்போது தைவான் ஜலசந்தியில் தற்போது நிலவும் பதட்டம் சீனாவால் செயற்கையாக ஏற்படுத்தப்பட்டது, அமெரிக்க சபாநாயகரின் தைவான் பயணத்திற்கு சீனா காட்டும் எதிர்ப்பு தேவையற்றது எனவும்,

அமெரிக்க படைகள் சர்வதேச விதிமுறைகள் அனுமதிக்கும் முறையில் உலகில் தைவான் ஜலசந்தி உட்பட எங்கெங்கு பறக்க, கடலில் பயணிக்க , இயங்க அனுமதி உள்ளதோ அங்கெல்லாம் இத்தகைய செயல்பாடுகளை மேற்கொள்ளும் என்றார்.

இதை தொடர்ந்து வரும் நாட்களில் தைவான் ஜலசந்தியில் அமெரிக்க கடற்படை போர் கப்பல்கள் பயணிக்கும் எனவும், அந்த பிராந்தியத்தில் அமெரிக்க கடற்படை தொடர்ந்து இயங்கி நட்பு நாடுகளுக்கு ஆதரவாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.