அமெரிக்க கடற்படையின் Snakehead LDUUV ஆளில்லா நீரடி வாகனம் சோதனை !!

  • Tamil Defense
  • August 17, 2022
  • Comments Off on அமெரிக்க கடற்படையின் Snakehead LDUUV ஆளில்லா நீரடி வாகனம் சோதனை !!

அமெரிக்க கடற்படை சமீபத்தில் Snakehead எனப்படும் LDUUV Large Displacement Underwater Unmanned Vehicle மிகப்பெரிய ஆளில்லா நீரடி வாகனத்தை விர்ஜினியா மாகாணத்தில் உள்ள நியூபோர்ட் நகரின் நராங்காசெட் சோதனை மையத்தில் சோதனை செய்துள்ளது.

இந்த LDUUV வாகனமானது கடலடியில் உள்ள நில நீர் அமைப்புகளை ஆய்வு செய்து அந்த தரவுகளை பின்னர் நீர்மூழ்கி கப்பல்களின் நடவடிக்கைகளை தடையின்றி மேற்கொள்ள அதாவது கடலடியில் எந்த சிக்கலுமின்றி யாருக்கும் தெரியாமல் இயங்க வழிவகை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை போர் கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள் ஆகியவற்றில் இருந்து இயக்க முடியும் மேலும் இது பல திறன் கொண்டது குறிப்பாக மின்னனு போரியல் முறை போன்றவற்றை சிறப்பாக மேற்கொள்ளும் ஆற்றல் கொண்டதாகும்.

IPOE Intelligence Preparation of the Operational Area அதாவது நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ள பகுதியில் முன்னமே சென்று ஆய்வு மேற்கொண்டு தகவல்களை சேகரிப்பது தான் இதனுடைய தலையாய பணியாகும்.