கடந்த 2016ஆம் ஆண்டு பாகிஸ்தான் அமெரிக்காவிடம் இருந்து எட்டு F-16 Block 52 ரக போர் விமானங்களை வாங்க பேச்சுவார்த்தை நடத்தியது கடைசி நேரத்தில் இதற்கான நிதி உதவியை அமெரிக்கா வழங்காததால் இதில் இருந்து பாகிஸ்தான் பின்வாங்கியது.
அன்று முதல் இன்று வரை பாகிஸ்தான் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிடம் இருந்தும் F-16 போர் விமானங்களை வாங்க பிரம்ம பிரயத்தனம் செய்தும் அமெரிக்கா பாகிஸ்தானால் ஒரே ஒரு F-16 போர் விமானத்தை கூட வாங்க முடியவில்லை.
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகள் F-35 போர் விமானங்களை வாங்கி வரும் நிலையில் தங்களிடம் ஏற்கனவே உள்ள F-16 போர் விமானங்களை படையில் இருந்து விலக்கி இரண்டாந்தரமாக விற்க முயற்சி செய்து வருகின்றன.
அத்தகைய F-16 போர் விமானங்களை கூட பாகிஸ்தானால் வாங்க முடியவில்லை இதற்கு காரணம் இரண்டாந்தரமாக விற்பனை செய்வதற்கு அமெரிக்காவின் அனுமதி வேண்டும் ஆனால் பாகிஸ்தானுக்கு என தெரிந்தால் அமெரிக்கா அதனை முடக்கி வருகிறது.
குறிப்பாக கடந்த பாலகோட் தாக்குதலுக்கு பிறகு இந்தியாவில் பாகிஸ்தான் F16 போர் விமானங்கள் மூலமாக தாக்குதல் நடத்த முயன்று பின்னர் க்ரூப் கேப்டன் அபிநந்தன் ஒரு F16 Block 52 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய சம்பவத்திற்கு பிறகு பாகிஸ்தான் மீதான அமெரிக்காவின் பிடி இறுகியது.
முதலில் பாகிஸ்தான் அந்த விமானங்களை பயன்படுத்தவில்லை என மழுப்பினாலும் பின்னர் இந்தியா சர்வதேச சமுகத்திற்கு முன்னர் ஆதாரங்களை சமர்பித்த பிறகு பாகிஸ்தானுடைய பொய் அமெரிக்காவிடம் எடுபடவில்லை அதன் பின்னர் பாகிஸ்தானுடைய முயற்சிகளை தடை செய்து கொண்டே இருக்கிறது.
இது தவிர தற்போது அமெரிக்க படைகளிடம் உள்ள அதிநவீன வானிலக்கு ஏவுகணையான AIM-120C -7 AMRAAM மற்றும் அபிநந்தன் அவர்களின் விமானத்தை சுட்டு வீழ்த்த உதவிய AIM-120 C5 AMRAAM ஏவுகணைகளை வாங்கும் பாகிஸ்தானின் முயற்சிகளை அமெரிக்கா கண்டு கொள்ளவில்லை இவையனைத்திற்கும் காரணம் அமெரிக்கா இந்தியாவை தனது பக்கம் இன்னும் அதிகமாக ஈர்க்க முயல்வதே ஆகும் என்றால் மிகையல்ல.
எது எப்படியோ பாகிஸ்தானுடைய 75 F16 போர் விமானங்களில் 57 அரத பழையதாகி விட்டன அவற்றிற்கான மேம்பாட்டு திட்டமும் பாகிஸ்தானிடம் இல்லை ஆகவே 2040க்கு பிறகு F16 விமானங்களை படையில் வைத்திருப்பது பாகிஸ்தானுக்கு இமாலய விஷயமாகும்.
இந்த நிலையில் தற்போது பாகிஸ்தான் F16 விமானங்களுக்கு மாற்றாக சீனா தயாரிக்கும் J10C ரக போர் விமானங்களை படையில் இணைத்து வருகிறது ஆனால் இவை F16 விமானங்களை விடவும் திறன் குறைந்தவை ஆகும், பாலகோட்டிற்கு பிறகு பாகிஸ்தான் விமானப்படை இந்தியாவுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த முயன்ற போது கூட J10C விமானங்களை முன்னனியில் களமிறக்கவில்லை F16 விமானங்களை தான் பயன்படுத்தியது.
இது தவிர எதிர்காலத்தில் பாகிஸ்தான் மேற்குலக தொழில்நுட்ப அமைப்புகள் மற்றும் திறன்களை கொண்ட துருக்கியின் ஐந்தாம் தலைமுறை போர் விமானம் அல்லது சீனாவின் விலை மலிவான ஆனால் அதே அளவு திறன்கள் இருப்பதாக சொல்லப்படும் ஐந்தாம் தலைமுறை விமானங்களில் ஏதேனும் ஒன்றை வாங்க முயற்சிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.