நார்வே வான் பாதுகாப்பு ஏவுகணைகளை வாங்கி உக்ரைனுக்கு கொடுக்கும் அமெரிக்கா !!

  • Tamil Defense
  • August 3, 2022
  • Comments Off on நார்வே வான் பாதுகாப்பு ஏவுகணைகளை வாங்கி உக்ரைனுக்கு கொடுக்கும் அமெரிக்கா !!

அமெரிக்கா நார்வே நாட்டிடம் இருந்து NASAMS வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளை வாங்கி உக்ரைனுக்கு கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த NASAMS – Norwegian Advanced Surface to Air Missile System நார்வே நாட்டின் தேசிய வான் பாதுகாப்பு திட்டத்தின் விளைவாகும்.

இடைத்தூர தாக்குதல் வரம்பை கொண்ட இந்த அமைப்புகள் ஆளில்லா விமானங்கள், உலங்கு வானூர்திகள், விமானங்கள் ஆகியவற்றை தாக்கி அழிக்கும் மட்டுமின்றி ஏற்கனவே வெற்றிகரமாக க்ரூஸ் ஏவுகணைகளை இடைமறித்து அழித்த வரலாறும் உண்டு.

அமெரிக்கா தற்போது இத்தகைய இரண்டு பேட்டரிகளை வழங்க உள்ளதாக உக்ரைன தெரிவித்துள்ளது அதாவது ஒரு பேட்டரிக்கு தலா 6 லாஞ்சர்கள் வீதம் 12 லாஞ்சர்கள் வழங்கப்படும் இதற்கான நடைமுறைகள் ஆரம்பித்து உள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது 9 நாடுகள் இந்த NASAMS வான் பாதுகாப்பு அமைப்பை பயன்படுத்தி வரும் நிலையில் உக்ரைன் தான் முதன் முதலில் ரஷ்யாவிற்கு எதிராக இந்த அமைப்புகளை பயன்படுத்த உள்ளது என்பது கூடுதல் சிறப்புமிக்க தகவல் ஆகும்.