சுகோய் விமானங்களின் மேம்பாடு பேச்சுவார்த்தை நடத்தும் இந்தியா வரும் ரஷ்ய குழு !!

ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சக குழு ஒன்று இந்திய விமானப்படையின் சுகோய்-30 போர் விமானங்களை மேம்படுத்தும் பணிகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த இந்தியா வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த மேம்படுத்தல் பணிகள் மூலமாக Sukhoi-30 MKI விமானங்கள் புதிய சக்திவாய்ந்த ரேடார், புதிய ஆயுதங்கள், புதிய விமானி அறை அமைப்புகள் மற்றும் புதிய அதிநவீன மின்னனு போர்முறை அமைப்புகள் ஆகியவற்றை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ரஷ்யா இந்தியா விபத்தில் இழந்த 12 சுகோய்-30 விமானங்களின் இடத்தை நிரப்பும் வகையிலும் குறைந்து வரும் படையணி எண்ணிக்கை பிரச்சினையை சற்றே சமாளிக்கும் விதமாகவும் புதிய 12 Su-30 MKI விமானங்களை ஆர்டர் செய்யும் எனவும் மேலும் 21 மிக்-29 Mig-29 போர் விமானங்களை ஆர்டர் செய்யும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

ஏற்கனவே பல முறை இந்திய விமானப்படையின் Su-30 MKI விமானங்களை மேம்படுத்தும் திட்டங்களை இந்தியாவிடம் முன்வைத்துள்ளோம் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த விரைவில் இந்தியா வர உள்ளதாக ரஷ்யாவின் United Aircraft Corporation நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி யூரி ஸீலையூசார் தெரிவித்தார்.