கெர்சோன் மீது உக்ரைன் தாக்குதல்;ஸப்ரோஸியா அணுமின் நிலையத்தை ஆய்வு செய்ய ஐநா முடிவு !!

  • Tamil Defense
  • August 31, 2022
  • Comments Off on கெர்சோன் மீது உக்ரைன் தாக்குதல்;ஸப்ரோஸியா அணுமின் நிலையத்தை ஆய்வு செய்ய ஐநா முடிவு !!

உக்ரைன் நாட்டின் கெர்சோன் பகுதியை ரஷ்ய படைகள் முன்னர் கைபற்றிய நிலையில் தற்போது உக்ரைன் ராணுவத்தின் தென் பிராந்திய கட்டளையகம் அதனை மீட்டெடுக்க தயாராகி வருகிறது.

இதன்படி கெர்சோன் மீது உக்ரைனிய படைகள் தாக்குதலை துவங்கி உள்ளன,மேலும் ஏற்கனவே ரஷ்ய படைகள் கைபற்றிய சில இடங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் காரணமாக அங்கிருந்து ரஷ்ய படைகள் பின்வாங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உக்ரைனிய படைகள் பிரங்கிகளை கொண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி முதல் தெற்கு உக்ரைனில் பல்வேறு முன்னனி போர்கக்கள பகுதிகளில் பலத்த தாக்குதல் நடத்தி வருவதாகவும் ஆனால் எந்தளவுக்கு உக்ரைன் படைகள் முன்னேறி உள்ளன என்பதை பற்றி தகவல்கள் இல்லை என இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே தெற்கு உக்ரைனில் உள்ள ரஷ்ய படைகளால் கைப்பற்றப்பட்ட ஸப்ரோஸியா அணுமின் நிலையத்தை சுற்றி நடைபெற்று வரும் சண்டை காரணமாக அணுமின் நிலையத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய ஐக்கிய நாடுகள் சபையின் IAEA சர்வதேச அணுசக்தி ஆணையத்தின் குழு ஒன்று ஆய்வு பணிகளை மேற்கொள்ள அங்கு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.