ரஷ்ய ஆளில்லா விமானங்களை வீழ்த்திய உக்ரைனிய படைகள் !!

  • Tamil Defense
  • August 6, 2022
  • Comments Off on ரஷ்ய ஆளில்லா விமானங்களை வீழ்த்திய உக்ரைனிய படைகள் !!

உக்ரைனிய படைகள் ரஷ்ய படைகளின் ஆளில்லா விமானங்களை தாக்கி அழித்துள்ளதாக உக்ரைன் ராணுவத்தின் தெற்கு கட்டளையகம் தெரிவித்துள்ளது.

அதாவது மைகோலாய்வ் பகுதியில் உக்ரைன் படைகள் மீது ரஷ்ய Lancet Kamikaze லான்செட் தற்கொலை தாக்குதல் ஆளில்லா விமானங்கள் தாக்குதல் நடத்த முயற்சி செய்த நிலையில்,

உக்ரைனிய படையினர் அவற்றை அடையாளம் கண்டு வெற்றிகரமாக விமான எதிர்ப்பு ஏவுகணைகளை ஏவி தாக்கி அழித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ஃபெப்ரவரி 24 முதல் ஆகஸ்ட் 4 வரையிலான காலகட்டத்தில் சுமார் 41,500 ரஷ்ய வீரர்களை உக்ரைனிய படைகள் கொன்றுள்ளதாகவும் அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.