மத்திய கிழக்கில் மிக முக்கியமான நாடான ஐக்கிய அரபு அமீரகம் ஒரே சீனா கொள்கைக்கு ஆதரவு அளிப்பதாகவும், சீனாவின் இறையாண்மையை மதிப்பதாகவும் கூறியுள்ளது.
மேலும் அந்நாட்டின் வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களையும் கடைப்பிடிக்க வேண்டும் எனவும்,
பதட்டத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கிய சுற்றுபயணங்கள் மற்றும் ஸ்திரத்தன்மை, உலக அமைதி ஆகியவற்றின் மீது அவை ஏற்படுத்தும் தாக்கம் விளைவுகள் பற்றியும் கவலை தெரிவித்துள்ளது.
மேலும் எந்த பிரச்சினை ஆனாலும் முறையான பேச்சுவார்த்தை நடைமுறைகள் மூலமாக பிராந்திய மற்றும் சர்வதேச ஸ்திரத்தன்மை பாதிக்கபடாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.