துருக்கியின் ஆளில்லா தாக்குதல் ஹெலிகாப்டர் அறிமுகம் !!
1 min read

துருக்கியின் ஆளில்லா தாக்குதல் ஹெலிகாப்டர் அறிமுகம் !!

துருக்கி ஏரோஸ்பேஸ் தொழிற்சாலை Turkish Aerospace Industries நிறுவனம் முதல் முறையாக உள்நாட்டிலேயே Augusta A129 Mangusta தாக்குதல் ஹெலிகாப்டரை அடிப்படையாக கொண்டு T129 ATAK எனும் தாக்குதல் ஹெலிகாப்டரை தயாரித்தது.

இது மிகப்பெரிய அளவில் குறிப்பாக சர்வதேச அளவில் பிரபலம் ஆனது தற்போது துருக்கியை தவிர்த்து ஃபிலிப்பைன்ஸ் விமானப்படை இதனை பயன்படுத்தி வருகிறது பாகிஸ்தான் வாங்க முயன்று தோல்வி அடைந்தது.

இப்படியிருக்க தற்போது இந்த T129 ATAK ஹெலிகாப்டரை அடிப்படையாக கொண்ட ஒரு ஆளில்லா தாக்குதல் ஹெலிகாப்டர் ஒன்றை தயாரித்துள்ளது இதனை முதல்முறையாக வெளி உலகிற்கு அறிமுகம் செய்து வைத்துள்ளது.

T629 என பெயரிடப்பட்டுள்ள இந்த ஆளில்லா தாக்குதல் ஹெலிகாப்டரின் மாதிரியை கடந்த வியாழக்கிழமை அன்று அறிமுகப்படுத்தியது இது மின்சக்தியால் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த T629 திட்டமானது கடந்த 2017ஆம் ஆண்டு துவங்கியது, 2019ஆம் ஆண்டு முதல் ஹெலிகாப்டரை தயாரிக்க தொடங்கியது விரைவில் படையில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது, இதன் காரணமாக துருக்கி வானூர்தி தயாரிப்பு துறை சர்வதேச ஆயுத சந்தையில் மிகப்பெரிய உச்சத்தை தொடும்.

இந்த ஹெலிகாப்டர் 6 டன்கள் எடை கொண்டது, இதில் L-UMTAS டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள், 70 மில்லிமீட்டர் ராக்கெட்டுகளை கொண்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.