உக்ரைனுக்கு 50 கவச வாகனங்கள் ஏற்றுமதி செய்த துருக்கி !!
உக்ரைன் படைகளுக்கு துருக்கி 50 BMC Kirpi கவச வாகனங்களை செய்துள்ளது, இந்த வாகனங்களை தற்போது உக்ரைனிய படைகள் பெற்றுள்ளதாக உக்ரைனில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ககோவ்கா படையணி அமைப்பு சமுக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் வெளிநாட்டு நண்பர்கள் நமக்கு உதவுகின்றனர், உலகமே ஒரு மோசமான எதிரி வீழ்த்தப்பட வேண்டும் என விரும்புவதாக அதில் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் இத்தகைய 150 BMC kirpi கவச வாகனங்களை இரண்டாவது கட்டமாக பெற உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர் ஆனால் எப்போது என்பது பற்றிய தகவல் இல்லை.
இந்த BMC Kirpi கவச வாகனங்களில் 360 டிகிரி சுழன்று சுடக்கூடிய இயந்திர துப்பாக்கி, கண்ணிவெடி தாக்குதல்களை தாங்கும் B6 அளவிலான கவசம், தீயணைப்பு வசதிகள் ஆகியவை உள்ளன இந்த வாகனத்தில் 12 வீரர்கள் பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.